பொது போக்குவரத்து தொடர்பில் திங்கட்கிழமை முதல் விசேட கண்காணிப்பு

Published By: Digital Desk 3

02 Oct, 2021 | 04:55 PM
image

(எம்.மனோசித்ரா)

பொது போக்குவரத்து தொடர்பில் வழங்கப்பட்டுள்ள விதிமுறைகளை மீறி செயற்படும் பஸ்கள் தொடர்பில் நாளைமறுதினம் திங்கட்கிழமை முதல் விசேட கண்காணிப்புக்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதன் போது ஆசன எண்ணிக்கைக்கு அதிகமாக பயணிகளை ஏற்றிச் செல்லும் பஸ் சாரதி மற்றும் நடத்துனர் கைது செய்வதோடு   , பஸ் அனுமதி பத்திரங்களை இரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

மேல் மாகாணத்தில் சுமார் 6000 பஸ்கள் முன்னர் சேவையில் ஈடுபட்டன. ஆனால் கொவிட் அச்சுறுத்தலுக்கு மத்தியில் 900 பஸ்கள் மாத்திரமே சேவையில் ஈடுபட்டன. காரணம் பஸ் சாரதிகள், நடத்துனர்கள் அந்த தொழில்களைக் கைவிட்டு வேறு தொழில்களுக்குச் சென்றுள்ளனர்.

எவ்வாறிருப்பினும் எந்த காரணத்திற்காகவும் சுகாதார விதிமுறைகளை மீறுவதற்கு இடமளிக்கப்பட மாட்டாது. பொலிஸ் மா அதிபருக்கு இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-04-18 06:28:13
news-image

காலியில் உள்ள ஹோட்டலில் சாப்பிட வந்த...

2025-04-18 02:55:21
news-image

"சிறி தலதா வழிபாடு" இன்று முதல்...

2025-04-18 01:45:51
news-image

தபால்மூல வாக்களிப்பு : 20ஆம் திகதிக்கு...

2025-04-17 21:45:00
news-image

ஜி.எஸ்.பி. பிளஸை தக்கவைப்பது அவசியம் -...

2025-04-17 21:49:14
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் ; ஜனாதிபதி...

2025-04-17 21:46:34
news-image

இந்தியாவுடனான பாதுகாப்பு ஒப்பந்தத்தை உடன் வெளிப்படுத்த...

2025-04-17 21:44:01
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியை...

2025-04-17 21:43:12
news-image

அஹுங்கல்லவில் துப்பாக்கிச் சூடு! ஒருவர் காயம்

2025-04-17 22:21:31
news-image

பிள்ளையானின் கைதால்  ரணில், கம்மன்பில கலக்கம்...

2025-04-17 21:46:12
news-image

குளத்தில் நீராடிய இளைஞன் நீரில் மூழ்கி...

2025-04-17 21:58:59
news-image

யாழில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க...

2025-04-17 21:14:06