எம்.எம்.சில்வெஸ்டர்

தெற்காசிய கால்பந்தாட்ட சம்மேளன சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் நேற்று இரவு நடைபெற்ற போட்டியில் மாலைத்தீவுகள் அணி 0 க்கு 1 என்ற கணக்கில் அதிர்ச்சித் தோல்வியைத் தழுவியது.

மாலைத்தீவுகளின் மாலேவில் நடைபெற்றுவரும் தெற்காசிய கால்பந்தாட்ட சம்மேளன சம்பியன்ஷிப் போட்டித் தொடரின் இரண்டாவது போட்டி இலங்கை நேரப்படி இரவு 9.30 மணிக்கு  நடைபெற்றது.

இப்போட்டியில் நடப்புச் சம்பியனும் போட்டி ஏற்பாடு நாடான மாலைத்தீவுகள் அணி நேபாளம் அணியை எதித்தாடியது. இப்போட்டியின் ஆரம்பம் முதலே மாலைத்தீவுகள் அணியினர் ஆதிக்கம் செலுத்தியிருந்தனர். 

போட்டியின் இரண்டாவது பாதி ஆரம்பமானதிலிருந்து இரு நாட்டு அணிகளும் புதிய வீரர்களை உள்ளே அனுப்பிக்கொண்டிருந்தனர். இதில் போட்டியின் 69 ஆவது நிமிடத்தில் மைதானத்துக்குள் நுழைந்த நேபாளத்தின் மனிஷ் டாங்கி போட்டியின் 86 ஆவது நிமிடத்தில் அலாதியான கோலொன்றை அடித்து தமது அணியை வெற்றி பெறச் செய்தார்.