வீரபாண்டி தொகுதியில் முன்னாள் தி.மு.க சட்டமன்ற உறுப்பினரும், தி.மு.க வின் தேர்தல் பணிக்குழு மாநில செயலாளருமான வீரபாண்டி ராஜா மாரடைப்பால் திடீரென காலமானார்.

தி.மு.க வின் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் இரண்டாவது மகன் ராஜா என்கிற ராஜேந்திரன். இவர் 2006 ஆம் ஆண்டில் வீரபாண்டி தொகுதியின் தொகுதியிலிருந்து தி.மு.க சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றார். 

இன்று அவரது பிறந்தநாள். இதனைத் தொடர்ந்து தன்னுடைய தந்தையாரின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்துவதற்காக தயாராகிக் கொண்டிருந்தார். இந்நிலையில் திடீரென்று அவர் மயங்கி கீழே சரிந்தார். 

உடனடியாகயாக அவரது குடும்பத்தினரும், உறவினர்களும் அருகில் இருந்த தனியார் வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாரடைப்பால் ஏற்கனவே மரணமடைந்து விட்டதாக  தெரிவித்தனர்.

இதனையடுத்து பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் அவரது வீட்டில் வைக்கப்பட்டிருக்கிறது. அவரது மறைவுக்கு தி.மு.க தலைவரும், முதல்வருமான மு க ஸ்டாலின் இரங்கல் செய்தி விடுத்திருக்கிறார். மேலும் அவரது மறைவிற்கு பல்வேறு கட்சியின் நிர்வாகிகளும் தொண்டர்களும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.