பெருந்தலைவர் காமராஜரின் 46 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று

Published By: Digital Desk 2

02 Oct, 2021 | 01:02 PM
image

பாரதம் போற்றிய மகாத்தலைவர், பிறப்பு முதல் இறப்பு வரை தன் வாழ்நாளை தேசத்திற்காகவே அர்ப்பணித்த தியாகச்செம்மல்.தமிழகத்தில் எத்தனையோ படித்த மேதைகள் வாழ்வில் ஒளியேற்றியவர் இப் படிக்காதமேதை ,கல்வி கண்களை திறந்த கண்ணப்பர் காமராஜர் அவர்கள்.

1903 ஜூலை 15 ஆம் திகதி விருது நகரில் குமாரசாமி நாடார் சிவகாமியம்மாள் தம்பதிகளுக்கு மகனாக பிறந்தார்.இயற்பெயர் காமாட்சி(குலதெய்வத்தின் பெயர்) எனவும் ,பின் ராஜா எனவும் அழைக்கப்பட்டு பின்'' காமராஜர் '' ஆனார். பள்ளிப்படிப்பை முழுமையாக தொடர முடியாமை காரணமாக மாமனாரின் துணிக்கடையில் வேலை பார்த்தார்.

வே.வரதராஜன் போன்ற தேசத்தலைவர்களின் பேச்சாற்றலால் ஈர்க்கப்பட்ட காமராஜர் 16ம் வயதில் காங்கிரஸ் உறுப்பினர் ஆனார்.1930 இல் ராஜாஜி தலைமையில் வேதாரண்யத்தில் நடந்த உப்புச்சத்யாகிரகத்தில் கலந்து கொண்டு அரசுக்கெதிராக போராட்டம் நடத்தியதற்காக கொல்கத்தா அலிப்பூர் சிறையில் சிறைவாசம் விதிக்கப்பட்டு அடுத்த ஆண்டே விடுதலை செய்யப்பட்டார்.1940 இல் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டமைக்காக மீண்டும் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

சிறையில் இருந்தவாறே விருது நகராட்சி மன்றத் தலைவரானார்.விடுதலையான பின் நேராக நகராட்சிக்கு சென்று தனது தலைமைப் பதவியை இராஜினாமா செய்தார். பின் 1942 இல் ஆகஸ்ட் புரட்சிக்காக கைது செய்யப்பட்டு மீண்டும் மூன்று வருடங்கள் சிறைவாசம் அனுபவித்தார்.அரசியலில் திரு. சத்யமூர்த்தியை தனது மானசீக குருவாகக்கொண்டவர் காமராஜர். இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு சத்யமூர்த்தி இல்லம் சென்று தேசிய கொடியை ஏற்றினார்.

1953 இல் தமிழக முதல்வராக இருந்த ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வித் திட்டத்துக்கு தமிழ் நாடே தனது எதிர்ப்பை தீவிரமாக தெரிவித்தது.ராஜாஜியின் அரசியல் செல்வாக்கும் சரியத் தொடங்கியது.

1964 இல் நேருவின் மறைவுக்குப் பின் லால் பகதூர் சாஸ்திரியை பிரதமருக்கான நாட்காலியில் அமர வைத்த பெருமை காமராஜரையே சாரும்.1966 இல் சாஸ்திரி மறைந்த பின் நேருவின் மகளான இந்திராகாந்தியை பிரதமராக காமராஜர் கைகாட்டியதும் காங்கிரஸ் அதை ஏற்றுக்கொண்டது.பின் இந்திராகாந்திக்கும் காமராஜருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக காங்கிரஸ் இரண்டாக உடைந்தது.

அந்நேரத்தில் தமிழகத்தில் அண்ணா தலைமையிலான தி.மு.க மக்கள் மத்தியில் திராவிட கொள்கைகளில் ஈர்க்கப்பட்டு பெரும் பலத்துடன் இருந்தது .அப்போது நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று அறிஞர் அண்ணா தமிழக முதல்வராக பதவி ஏற்று தமிழ் நாட்டை வழி நடத்தினார். இந்நிலையில் இந்திராகாந்தி கொண்டு வந்த '' மர்ஸென்ஸி '' சட்டத்தில் தன்னை எதிர்த்த இந்திய விடுதலைக்காக பாடுபட்ட ஜெயப்ரகாஷ் நாராயணன், மொரார்ஜி தேசாய் போன்ற தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் .

ஆச்சாரி கிருபாலனியும் சிறைவாசம் கொண்டார் என்ற செய்தியைக் கேள்வியுற்ற  நிலையில் காந்தி பிறந்த நாளான ஒக்டோபர் இரண்டாம் திகதி மத்திய உணவுக்குப்பின் உறங்கச்சென்ற தமிழ்நாட்டின் '' விடிவெள்ளி ''தன் ஒளியை இழந்தது. பல இலட்சம் பேர் வாழ்வில் விளக்கேற்றிய விருதுநகர் வழங்கிய விருதான காமராஜர் இம்மண்ணை விட்டு மறைந்து விண்ணுடன் இணைந்து '' துருவநட்சத்திரமானார் ''.இறக்கும் தருவாயில் அவரின் சட்டைப்பையில் 100/=ரூபாயும்,வங்கிக் கணக்கில் 125/=ரூபாவும், 4 வேஷ்டிகள்,4.சட்டைகள்,2 சோடி செருப்புகள் 1 மூக்குக்கண்ணாடி மட்டுமே இருந்தன.

எத்தனை யுகங்கள் சென்றாலும் கர்ம வீரர் காமராஜர் போன்ற யுக புருஷர்கள் இம்மண்ணில் தோன்றுவது அபூர்வமே, ஒவ்வொரு தமிழனின் நெஞ்சங்களில் காமராஜர் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார். யுக புருஷர்களுக்கு மறைவென்பதே இல்லை.

எஸ்.கணேசன் ஆச்சாரி சதீஷ் கம்பளை

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22
news-image

திரிசங்கு நிலையில் தமிழ் அரசு கட்சி

2024-04-15 18:46:22
news-image

சுதந்திரக் கட்சிக்குள் வீசும் புயல்

2024-04-15 18:41:46
news-image

ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் பிரதிநிதிகள் முரண்பாடுகள்

2024-04-15 18:37:16
news-image

மலையக மக்களை இன அழிப்பு செய்த ...

2024-04-15 18:33:43
news-image

எதற்காக நந்திக்கடலில் பயிற்சி முகாம்?

2024-04-15 18:27:21