பெற்றோலியத் துறையை வலுப்படுத்துவதில் இலங்கை - இந்தியாவிற்கிடையில் அவதானம்

02 Oct, 2021 | 10:32 AM
image

 (எம்.மனோசித்ரா)

பெற்றோலியத் துறையில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கும் , விரிவாக்குவதற்குமான வழிகள் குறித்து இலங்கை - இந்திய இரு தரப்பு அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவிற்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட மற்றும் இந்திய பெற்றோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி ஆகியோருக்கிடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. 

இந்த சந்திப்பின் போதே இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டது.

டில்லியிலுள்ள பெற்றோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சில் வெள்ளியன்று இந்த சந்திப்பு இடம்பெற்றது. 

ஹர்தீப் சிங் பூரி பெற்றோலியம் மாத்திரமின்றி வீட்டு அபிவிருத்தி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சராகவும் பதவி வகிக்கின்றார்.

அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அரசியலில் பிரவேசிப்பதற்கு முன்னர் , சிறந்த தொழில்முறை இராஜதந்திரிகளில் ஒருவராக காணப்பட்டதோடு , 1984 - 1988 காலப்பகுதியில் இலங்கையிலும் பணியாற்றியுள்ளார்.

இந்த சந்திப்பின் போது, பெற்றோலியத் துறையில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கும் , விரிவாக்குவதற்குமான வழிகள் உட்பட பல விடயங்கள் குறித்து அமைச்சரும் உயர்ஸ்தானிகரும் கலந்துரையாடினர்.

இதன் போது உயர் ஸ்தானிகர் மிலிந்த மொரகொட கொள்கை வரைபு கூட்டுத்திட்டத்தை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியிடம் கையளித்தமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லுணுகலையில் தங்க நகை திருட்டு -...

2025-06-24 12:45:25
news-image

முன்னணி நரம்பியல் வைத்திய நிபுணர் உட்பட...

2025-06-24 12:55:54
news-image

யாழ். மாவட்ட அரச அதிபராக கடமைகளை...

2025-06-24 12:59:38
news-image

இந்திய விசேட விமானத்தில் இஸ்ரேலில் இருந்து...

2025-06-24 12:20:06
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-06-24 12:12:55
news-image

இஷாரா செவ்வந்தி வெளிநாட்டுக்கு தப்பிச் செல்லவில்லை...

2025-06-24 11:36:26
news-image

கம்பளையில் தடை செய்யப்பட்ட பூச்சிக்கொல்லிகள் கைப்பற்றல்...

2025-06-24 12:19:25
news-image

கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்திற்கு இணையாக கொழும்பு...

2025-06-24 11:48:14
news-image

பூம்புகாரில் இன்னல்களுடன் வாழும் மக்கள் -...

2025-06-24 11:12:15
news-image

பிரதமர் ஹரிணியை சந்தித்தார் ஐ.நா. மனித...

2025-06-24 11:45:38
news-image

பலாலி மீன்பிடி துறைமுக புனரமைப்பு பணிகளை...

2025-06-24 11:11:03
news-image

செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி மக்களின் சிந்திக்கும்...

2025-06-24 10:45:42