(எம்.மனோசித்ரா)
மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவில் ஓந்தாச்சிமடம் பிரதேசத்தில் கணவன், மனைவிக்கிடையில் ஏற்பட்ட முரண்பாட்டில் கணவனால் தாக்குதலுக்குள்ளான மனைவி உயிரிழந்துள்ளார்.
கணவனின் தாக்குதலால் படுகாயமடைந்த நிலையில் களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே மனைவி உயிரிழந்ததாக பொலிஸாருக்குக்கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் 31 வயதுடைய பலநோக்கு கூட்டுறவு வீதி, மகிளூர் பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். உயிரிழந்த பெண்ணின் சடலம் இன்றையதினம் களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையின் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டிருந்தது.
இந்த சம்பவம் தொடர்பில் 38 வயதுடைய மகிளூர் பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் வெளிநாட்டில் தொழில் புரிந்து நாடு திரும்பியிருந்த நிலையில், வெளிநாட்டில் இருந்த போது அவரால் அனுப்பப்பட்ட பணம் தொடர்பில் கேட்ட போதே இருவருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM