நாடகத்திரை, வெள்ளித்திரை இவைகளில் தன் கலையாளுமையை செலுத்த வி.சி.கணேசன் என்ற இந்த சாதாரண மனிதன் பட்ட கஷ்ட நஷ்டங்கள்,அவமானங்கள் தான் எத்தனை எத்தனை..... '' மின்மினிப்பூச்சிகள் கூடப் பறக்கும் போது தான் மின்னுகின்றன'' என்பது பொன்மொழி. சிவாஜி அவர்கள் திரைச்சிகரத்தை அடைவதற்கு பல தியாகங்களை விலையாகக் கொடுத்தார்.
சிவாஜி பிறந்த அன்றே தகப்பன் சின்னையா மன்றாயர் தேசிய விடுதலை போராட்டத்தில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார் , பிறந்த அன்றே தகப்பனை சிறைவாசம் அனுப்பிய தரித்திரம் பிடித்த பிள்ளை என தாயைத்தவிர மற்ற உறவுகள் வசை பாடினார்கள்.
தெருக்கூத்து நாடகங்கள்,கம்பளத்தான் கூத்துகள் போன்ற பொழுது போக்குகள் கணேசனின் பசியை மறக்கச் செய்தது. படிப்பிலும் பெரிதாக ஆர்வமில்லை சதா நாடகம்தெருக்கூத்து என்றிருந்த மகனின் கலையார்வத்தை அறிந்து கொண்டார் தாயார். அப்போது திருச்சியில் முகாமிட்டிருந்த '' யதார்த்தம் பொன்னுச்சாமிப்பிள்ளையின் மதுரை ஸ்ரீ பால கான சபா'' நாடகக்குழுவில் பழம்பெரும் நடிகர் சக்ரபாணி உதவியுடன் இணைந்து நடிக்கத் தொடங்கினார்.
அதன் பிறகு 1950 களில் '' பராசக்தி'' நாடகம் திரைப்படமாக உருவான நேரத்தில் கணேசன் படாத பாடுபட்டு '' குணசேகரன் '' என்ற பாத்திரத்தில் கதாநாயகனாக நடித்து படம் முக்கால்வாசி வளர்த்த நிலையில் ஏவிஎம் அதிபர் மெய்யப்பச் செட்டியார் மூலம் ஒர் பெரிய ஆபத்து வர இருந்தது. படத்தை பார்த்த செட்டியார் சிவாஜியைப் பார்த்து குதிரை மூஞ்சி,மீனுவாயன் மாதிரி இருக்கான்,ரிஸ்க் எடுக்காம கே.ஆர். ராமசாமியைப் போட்டு படத்தை மீண்டும் எடுங்கள் என படத்தின் மற்றொரு பாகஸ்தரான தயாரிப்பாளர் நெஷனல் பிக்சர்ஸ் பெருமாளிடம் கூற இடிந்தே போனார் கணேசன்.
பிறகு அறிஞர் அண்ணா போன்றோர் கணேசனின் நடிப்பில் நம்பிக்கை உள்ளது எனவே பாக்கி காட்சிகளை கணேசனை வைத்தே எடுத்து படத்தை முடியுங்கள் எனக்கூற '' பராசக்தி '' தமிழ் நாடு முழுவதும் அபார வெற்றி கண்டது.
சிவாஜி நடித்த '' பாபு '' படத்தை ஹிந்தி ரீமேக்கில் திலீப்குமார் நடிக்க தயாரானபோது, படத்தை திலீப்குமார் பார்த்து விட்டு இந்த ரோலில் நான் மட்டுமல்ல வேறு எந்த நடிகனாலும் இவ்வாறு உருக்கமாக செய்ய முடியாது என முயற்சியை கைவிட்டார்.இது வட இந்திய கலைஞன் சிவாஜிக்கு கொடுத்த ஓர் மாபெரும் அங்கீகாரம்.
அண்ணா அவர்கள் ஒரு முறை ,உலகின் தலை சிறந்த நடிகரான மாலன் பிராண்டோ முயற்சித்தால் ஒரு வேளை சிவாஜியைப் போல் நடிக்க முற்படலாம் என்றார். இந்த ஒரு வார்த்தை தமிழ் நாட்டின் பெர்னாட்சா என வர்ணிக்கப்படும் அண்ணாவின் திருவாயினால் மலர்ந்தது.
யுகங்கள் பல கடந்தாலும் யுகபுருஷர் சிவாஜி கணேசன் புகழ் என்றென்றும் நீடிக்கும் பல யுகங்கள் கடந்து ....சிவாஜியால் ஒவ்வொரு தமிழனும் புகழ் கொள்ளும் சூழல் ஏற்படக் காரணமாக இருந்த அன்னை கலைமகளுக்கு நன்றி...!
எஸ்.க.ஆ.சதீஷ் கம்பளை
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM