நடிகர் ரஜினிகாந்தின் இரண்டாவது மகளான சவுந்தர்யா  விவாகரத்து செய்யவுள்ளதாக வெளிவந்த செய்திகள் உண்மையென தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும், இருவரும் தனித்தனியாக வசித்து வருவதாகவும் அவர்  கூறியுள்ளார்.

இந்நிலையில் தான் விவாகரத்து செய்யவுள்ளதாக வெளிவந்த தகவல் உண்மையெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சவுந்தர்யாவுக்கும் தொழில் அதிபர் அஸ்வின் ராம்குமாருக்கும் கடந்த 2010 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது.  இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். இந்நிலையில் இவர்கள் பிரிந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. தற் போது குறித்த விடயம் உண்மையென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.