நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் 94-வது பிறந்தநாளை முன்னிட்டுசென்னையில் உள்ள அவரது மணி மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவ சிலைக்குதமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

 நடிகர் திலகம் சிவாஜி  கணேசன் அவர்களின் 94-வது பிறந்தநாள் இன்றுகொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி சென்னையில் அமைக்கப்பட்டுள்ள சிவாஜி கணேசன் மணிமண்டபத்திற்குதமிழக முதல்வர் மு க ஸ்டாலின், அமைச்சர் பெருமக்கள் உள்ளிட்ட பலரும் வருகை தந்தனர். 

பின்னர் முதல்வர் மு க ஸ்டாலின் அங்கு அமைக்கப்பட்டுள்ள நடிகர் திலகம் சிவாஜி கணேசனின்திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்தும், அவரது திருவுருவப் படத்திற்கு மலர்தூவியும்அஞ்சலி செலுத்தினார். இது தொடர்பாக அவருடைய சுட்டுரையில்,''நடிப்பின் உச்சம்.. நட்பின்இலக்கணம்.. நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன் அவர்களின் பிறந்த நாள். அனல் பறக்கும் புரட்சிகர பராசக்தி வசனத்தை சிம்மக் குரலில் கர்ஜித்துதலைவர் கலைஞருடன் நட்பு பாராட்டிய குணசேகரன் அவர். கலை உலகம் உள்ளவரை அவரது புகழ் போற்றப்படும்.'' என பதிவிட்டிருக்கிறார். இந்த நிகழ்வின் போது நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வாரிசுகளானராம்குமார், பிரபு உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களுடன் அவரது ரசிகர்களும், திரையுலகபிரபலங்களும் பங்குபற்றினர்.