Published by T. Saranya on 2021-10-01 15:26:51
(எம்.மனோசித்ரா)
முடக்க நிலைமையை முடிவுக்கு கொண்டு வர நாட்டை கட்டுப்பாடற்ற விதத்தில் திறப்பதானது, மீண்டும் தொற்று பரவல் ஆரம்பமாக வழிவகுக்கலாம்.
தடுப்பூசி வழங்கும் வீதம் அதிகமாகக் காணப்பட்டாலும், தற்போது இனங்காணப்படும் தொற்றாளர் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளதால் நாட்டை கட்டுப்பாடின்றி திறப்பதன் மூலம் முன்னரை விடவும் தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிக்க வழியேற்படலாம் என்று இலங்கை மருத்துவ சங்கம் எச்சரித்துள்ளது.
அத்தோடு தடுப்பூசியால் தூண்டப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தியானது நோய் தீவிரமடைவதற்கும், மரணம் சம்பவிப்பதற்கும் எதிராக பாதுகாப்பு வழங்குமே தவிர தொற்று பரவலைக் குறைப்பதில் பயனுறுதி மிக்கதாக இருக்காது.
மீண்டும் தொற்றுப் பரவல் ஏற்படுதலானது பெருந்தொற்றின் இன்னொரு அலைக்கு வழிவகுக்குமே தவிர தொற்று பவலைத் தடுப்பதில் பயனுறுதி மிக்கதாக இருக்காது என்றும் இலங்கை மருத்துவ சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.