உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : காத்தான்குடியில் கைதானவர்களின் விளக்கமறியல் நீடிப்பு

Published By: Digital Desk 4

01 Oct, 2021 | 04:31 PM
image

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்தில் கைதுசெய்யப்பட்ட சஹ்ரானின் சகோதரி, உட்பட சியோன் தேவாலய தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் 63 பேரையும் எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.எம். றிஸ்வான் காணொளி மூலமாக நேற்று  (30) உத்தரவிட்டார்.

கடந்த 21.4.2019 உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தாக்குதலின் பின்னர் சஹ்ரான் குழுவோடு தொடர்புடையவர்கள் என்றும் இவர்கள் ஹம்பாந்தோட்டை மற்றும் நுவரெலியா போன்ற இடங்களுக்கு பயிற்சிக்காக சென்றார்கள் என்ற சந்தேகத்தின் பெயரில்  காத்தான்குடியை சேர்ந்த 65 பேர் கைது செய்யப்பட்டனர்.

அதேவேளை சஹ்ரானின் சகோதரி மற்றும் அவரின் கணவர், உட்பட 4 பேரை மட்டக்களப்பு பொலிசார் கைது செய்தனர். இரு வெவ்வேறு வழக்குகளை கொண்ட 69 பேர் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இவர்களில் 5 பேர் வழக்கில் இருந்து விடுவித்து விடுவிக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து 64 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் குறித்த வெவ்வேறு இரு வழக்கு இலக்கங்களை கொண்ட 64 பேரும் நாட்டிலுள்ள பொலன்னறுவை, அனுதாரபுரம், கேகாலை, திருகோணமலை, போன்ற சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டு தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

இவர்களை தற்போது தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் காரணமாக நீதிமன்றிற்கு அழைத்துவர முடியாததன் காரணமாக அவர்களை காணொளி மூலமாக எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மஹிந்த, ரணிலுடன் ஒன்றிணையப் போவதாக கூறப்படுவது...

2025-03-24 16:40:52
news-image

மூன்று நாள் டெங்கு ஒழிப்பு விசேட...

2025-03-24 19:18:15
news-image

ஐ.தே.க.வுக்கு வைத்த பொறியில் ஜே.வி.பி. சிக்கிக்...

2025-03-24 19:10:48
news-image

நாட்டில் சிக்குன்குனியா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு...

2025-03-24 19:21:34
news-image

சவேந்திர சில்வா, வசந்த கரணாகொட, ஜகத்ஜெயசூரிய,...

2025-03-24 21:05:12
news-image

நாடளாவிய ரீதியில் 6 தேர்தல் முறைப்பாடுகள்...

2025-03-24 19:18:53
news-image

மின்சார சட்ட திருத்தம் தொடர்பில் மின்சக்தி...

2025-03-24 16:41:13
news-image

குருணாகலில் தனியார் கல்வி நிறுவனமொன்றில் 10...

2025-03-24 20:05:45
news-image

கணித வினாத்தாள் தொடர்பில் அதிருப்தி வெளியிட்ட...

2025-03-24 19:10:07
news-image

296 மோட்டார் சைக்கிள்கள் உரிய தொகை...

2025-03-24 19:17:04
news-image

தனியார், அரச சார்பற்ற நிறுவனங்களிடமிருந்து அறவிட...

2025-03-24 19:08:36
news-image

கோப், கோபா உள்ளிட்ட 4 குழுக்களால்...

2025-03-24 19:00:11