உத்­தேச அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்கப் பணி­ களில் உங்­க­ளது கட்­சியின் வகி­பாகம் என்ன?

உத்­தேச அர­சியல் அமைப்புத் திருத்­தத்­திற்கு எங்­க­ளு­டைய வேண்­டு­தலை நாம் முன்­வைத்­துள் ளோம். அது சம்­பந்­த­மாக உரி­ய­வர்­க­ளுடன் பேசி­யி­ருக்­கின்றோம். மலை­ய­கத்தில் எங்­க­ளு­டைய பிர­தி­நிதித்­துவம் காப்­பாற்­றப்­பட வேண்டும், எல்லை நிர்­ணயம் தொடர்பில் அக்­க­றை­யுடன் செயற்­பட வேண்டும் போன்ற இரண்டு விட­யங்­களை அக்­க­றை­யுடன் குறிப்­பிட்­டுள்ளோம். இங்கு எல்லை நிர்­ணயம் என்­பது மிக முக்­கி­ய­மா­ன­தொரு விடயம். இது சிர­ம­மாக இருந்­தாலும் கூட அதனை உரிய முறையில் கவ­னிக்­கா­விடின் எமது பிர­தி­நி­தித்­துவம் பெரிதும் பாதிக்­கப்­பட்டு விடும்.

எமது மலை­யக மக்கள் பரந்­த­ளவில் வாழ்­கின்­றனர். குறிப்­பிட்­ட­தொரு மாவட்­டத்தில் மாத்­திரம் இல்லை. வடக்கு, கிழக்­கிலும் எமது மலை­யக மக்கள் இருக்­கின்­றனர். இதில் உதா­ர­ண­மாக கிளி­நொச்­சியை எடுத்துக்­கொண்டால் அங்­குள்ள எமது மக்கள் அப்­ப­கு­தி­யி­லுள்ள பிர­தி­நி­தி­களின் வ­னத்­திற் குள் உள்­ள­டக்­கப்­ப­டு­வார்கள். அதே­வேளை அங்­குள்ள ஏனைய மக்­க­ளுடன் இணைந்தே அவர்­களும் கவ­னிக்­கப்­ப­டு­வார்கள். இப்­போது விசே­ட­மாக நுவ­ரெ­லியா மாவட்­டத்தை எடுத்­துக்­கொண்டால் ஐந்து பிர­தி­நி­திகள் தெரிவு செய்­யப்­ப­டு­கின்றோம். விகி­தா­சார முறை­மைய இருப்­ப­த­னா­லேயே இவ்­வாறு நாம் தெரிவு செய்­யப்­ப­டு­கின்றோம்.இந்த முறையில் குறை­பா­டுகள் இருந்­தாலும் முழு­மை­யாக ஏற்­றுக்­கொள்­ளக்­கூ­டி­ய­தா­கவும் இருக்­கின்­றது.

விகி­தா­சார பிர­தி­நி­தித்துவ முறை­யில் ஒரு சில குறை­பா­டுகள் இருந்­தாலும் அதுவே எமக்கு பொருத்­த­மா­னது.அதில் உள்ள குறை­களை ஆராய்ந்து அதற்குள் மாற்று வழி­களை கண்டு பிடித்­தி­ருக்­கலாம். அதை­வி­டுத்து தொகு­திக்கு ஒரு அங்­கத்­தவர் என்ற ரீதியில் செய்யப்­படும் போது அது எமது பிரதி நிதித்­து­வத்தில் பெரும் பாதிப்பை ஏற்­ப­டுத்­தி­விடும்.

ஆகையால் எமது கட்­சி­யினர் இவ்­வி­ட­யத்தில் மிகுந்த அக்­க­றை­யுடன் செயற்­பட்டு மலை­யக மக்­க­ளுக்கு சாத­க­மா­ன­தாக இந்த உத்­தேச அர­சி­ய­ல­மைப்பு இருக்க வேண்டும் என வேண்­டி­யுள்ளோம். அத்­துடன் மொழிப்­பி­ரச்­சினை சம­மாக அதா­வது தமிழ்­மொ­ழியும் அங்­கீ­க­ரிக்­கப்­பட்­ட­தாக இருக்க வேண்டும். இலங்­கையில் சகல பகு­தி­க­ளிலும் தமி­ழர்கள் வாழ்­கின்­றனர். ஆகவே அவர்­க­ளுக்­கு­ரிய தமிழ்­மொழி அந்­தஸ்த்து இருக்க வேண்டும். வடக்கு, கிழக்குப் பகு­தியில் இருப்­ப­வர்கள் மாத்­திரம் தமி­ழர்கள் அல்ல. ஆகவே அதற்­க­மைய எல்லாம் அமைய வேண்டும். எல்லா அரச, தனியார் உட்­பட சகல நிலை­யங்­க­ளிலும் தமிழ் மொழிக்கு அந்தஸ்து கிடைக்க வேண்டும். இத­னையும் நாம் பிர­தான விட­ய­மாக உள்­ள­டக்­கி­யுள்ளோம். எனவே இந்த உத்­தேச அர­சியல் அமைப்பு மலை­யக மக்­க­ளுக்கு சாத­க­மாக அமைய வேண்டும்.

பாரா­ளு­மன்றம் அர­சி­ய­ல­மைப்பு சபை­யா­கவும் செயற்­ப­ட­வுள்ள நிலையில் அந்த செயன்­ மு­றையில் எத்­த­கைய குழுக்­களில் நீங்கள் அல்­லது உங்கள் கட்சி அங்­கத்­த­வர்கள் அங்கம் வகிக்­கின்­றீர்கள்? அத்­த­கைய குழுக்­களில் மலை­யக மக்கள் குறித்து நீங்கள் முன்­வைத் திருக்கும் யோச­னைகள் என்ன?

அர­சி­ய­ல­மைப்பு சபையில் நான் நிதிக்­கு­ழுவில் இருக்­கின்றேன். இக்­கு­ழுவில் மலை­யக மக்­க­ளுக்­கென தனிப்­பட்ட ரீதியில் கருத்­துக்­களை முன்­வைக்கவோ செயற்படவோ முடி­யாது. ஏனெனில் நிதி­வி­டயம் என்­பது பொது­வா­ன­தாகும். இது முழுக்க முழுக்க நிதி கையாளும் முறை­யாக உள்­ளது. ஒவ்­வொரு தொகு­தி­க­ளுக்கும் எவ்­வாறு நிதி ஒதுக்­கீட்டு முறையை மேற்­கொள்ள வேண்டும் என்­பதே இங்கு முக்­கியம்.

உத்­தேச அர­சி­ய­ல­மைப்பு மாற்­றத்தின் ஊடாக மலை­யக மக்­க­ளுக்கு தனி­யான அதிகார அலகு பற்றி வட­மா­காண சபை தீர்­மா னம் நிறை­வேற்றி உள்­ளது. அது பற்­றிய உங்கள் கருத்து என்ன?

இவ்­வா­றான தீர்­மானம் நிறை­வேற்­றி­யி­ருப்­பது வர­வேற்­கத்­தக்க விடயம். ஆனால், வடக்கு, கிழக்கு பகுதி மக்­களின் அபி­வி­ருத்தி, புனர்­வாழ்வு, காணி பிரச்­சினை போன்ற பல விட­யங்கள் தொடர்பில் அந்த சபையில் பல்­வேறு தீர்­மா­னங்கள் நிறை­வேற்­றி­யுள்ள போதிலும் அவை எவையும் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டு­வ­தில்லை என அவர்­களே கூறு­கின்­றனர். இந்­நி­லையில், இவ்­வா­றா­ன­தொரு தீர்­மானம் நிறை­வேற்­றி­யி­ருப்­பது எமது மக்­க­ளுக்கு எந்த வகையில் பல­ன­ளிக்கும் எனத் தெரி­ய­வில்லை. மலை­யக மக்கள்

மத்­திய மலை­நாட்டில் மாத்­திரம் அல்ல பரந்து வாழும் ஒரு சமூகம். எமது மக்கள் தொழிற்­து­றையை மைய­மாகக் கொண்டு தங்­க­ளது குடி­யி­ருப்­புக்­க­ளையும் அமைத்து வாழ்ந்து வரு­கின்­றனர். இந்­நி­லையில் தனி­யலகு பற்றி கேட்­பது எந்த அள­வுக்கு பொருத்­த­மா­ன­தாக இருக்கும் என்று கூற முடி­யாது. நாம் தேர்தல் தொகு­தி­யாகக் கேட்­பது பொருத்­த­மாக இருக்­குமே தவிர நிர்­வாக அல­கு­கள் கேட்­பது பொருத்­த­மாக அமை­யாது. இருந்­தாலும் இவ்­வா­றா­ன­தொரு எண்ணம் அவர்­க­ளுக்கு வந்­த­தை­யிட்டு நான் மகிழ்ச்­சி­ய­டை­கின்றேன்.

அவ்­வா­றாயின் மலை­யக மக்­க­ளுக்­கான அதி­காரப் பகிர்வு எவ்­வாறு அமைய வேண்டும் என நீங்கள் எதிர்­பார்க்­கின்­றீர்கள்?

பிர­தி­நி­தித்­துவம் , அரச உத்­தி­யோகம், காணி பிரித்தல் , போன்ற விட­யங்­களில் அதி­காரப் பகிர்­வுகள் முக்­கி­ய­மாக இருக்க வேண்டும். காணி பகிர்வு விட­யங்­களே இங்கு முக்­கி­யத்­துவம் பெறு­கின்­றது. பெரும் எண்­ணிக்­கை­யான ஏக்கர் காணிகள் இருக்­கின்­றன. இது மலை­யக மக்­க­ளுக்கு சாத­க­மாக அமையும் வண்ணம் பகிர்ந்­த­ளிக்க வேண்டும். பொது­வாக அதி­காரப் பகிர்வு விட­யத்தில் மலை­யக மக்­க­ளுக்கு சாத­க­மாக அமையும் வகையில் இருக்க வேண்டும் என்­பதே எமது எதிர்ப்­பார்ப்பு. அத்­துடன் எமது பரம்­ப­ரை­யினர் தோட்­டத்­தொழில் ஈடு­பட்டு வந்­தனர். ஆனால், தற்­போது ஏற்­பட்­டுள்ள ௪மூக மாற்­றத்­தினால் தேயிலைத் தோட்­டத்தை விட்டு வெளி­யேறும் நிலை ஏற்­பட்டு வரு­கின்­றது. அது மாத்­தி­ர­மன்றி பெரும்­பா­லான பெருந்­தோட்டப் பகு­திகள் தற்­போது முறை­யாக பரா­ம­ரிப்­பதும் இல்­லா­தி­ருக்­கின்­றது.

இவ்­வாறு வெளி­யேறும் நிலை ஏற்­படும் போது மலை­ய­கத்தின் பிர­தி­நி­தித்­து­வத்தில் பாதிப்பு ஏற்­படும் நிலை உரு­வாகும். இதனை தடுப்­ப­தற்கு நீங்கள் எவ்­வாறு நட­வ­டிக்கை எடுப்­பீர்கள்?

இவ்­வாறு குறை­யாமல் இருப்­ப­தற்கும் அவர்கள் வெளி­யே­றாமல் இருப்­ப­தற்கும் நாம் சொந்த காணி­களை வழங்க வேண்டும். தோட்­டப்­ப­கு­தி­களை கிரா­ம­மாக மாற்­ற­வேண்டும் என நாம் அர­சாங்­கத்­திடம் கோரி வரு­கின்றோம். பெரும்­பா­லான தேயிலை, இறப்பர் தோட்­டங்கள் மூடப்­பட்டு வரு­கின்ற நிலையில் அங்­கி­ருக்கும் காணி­களை எமதுமக்­க­ளுக்கு பகிர்ந்­த­ளிக்க வேண்டும். வெளி மாவட்டங்­க­ளுக்கு எமது மக்கள் வேலைக்குச் சென்­றா லும் எல்­லோரும் செல்லும் இடத்தில் காணி­களை எடுத்து வாழ்­வ­தில்லை. சிலர் மாத்­தி­ரமே இவ்­வாறு வாழ்­கின்­றனர். ஆகையால் அவ்­வா­றா­ன­தொரு பாதிப்பு ஏற்­ப­டாது என்­பதை நாம் எதிர்ப்­பார்க்­கின்றோம்.

உத்­தேச தேர்தல் முறை எவ்­வாறு அமையும் என நீங்கள் கரு­து­கின்­றீர்கள்?

உத்­தேச தேர்தல் முறை இவ்­வாறு தான் அமை­யப்­போ­கின்­றது என்­பது குறித்து இது­வ­ரை­யிலும் வெளிப்ப­டை­யாக எதுவும் கூற­வில்லை. 242 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களை உள்­ள­டக்­க­வுள்­ள­தாக ஊட­கங்கள் வாயி­லாக நான் தெரிந்­து­கொண்டேன். 225பேர் தேர்­த­லி­னூ­டா­கவும் மிகு­தி­யானோர் தேசி­ய­ப்பட்­டியல் மூலமும் தெரிவு செய்­ய­வுள்­ள­தா­கவும் அறிந்தேன். அர­சாங்கம் இது தொடர்பில் அதா­வது இந்த உத்­தேச தேர்தல் முறைமை இவ்­வாறு தான் அமை­யப்­போ­கின்­றது என்று கூறி­யி­ருந்தால் தெளி­வாக இருக்கும்.

இவ்­வாறு நீங்கள் கூறு­கின்­றீர்கள்? மலை­யக மக்­க­ளுக்கு பாத­க­மாக அமைந்தால் நீங்கள் அதற்கு எடுக்கும் பரி­காரம்?

ஒவ்­வொரு மாவட்­டங்­க­ளுக்கும் ஒவ்­வொரு தொகு­திகள் இருக்­கின்­றது. இதில் எல்லா மாவட்­டங்­க­ளிலும் மலை­யக சமூ­கத்­தினர் குறை­வா­கவே இருக்­கின்­றனர். இதில் வாக்­கா­ளர்­களின் எண்­ணிக்­கையும் குறை­வா­கவே இருக்­கின்­றது. இந்­நி­லையில் தொகு­தி­வாரி முறைத் தேர்தல் முறை வரும் போது எமது பிரதி நிதித்­து­வத்தில் பெரும் பாதிப்பு ஏற்­படும். ஆகையால் இந்த எல்லை நிர்­ண­யத்தின் போது, குறிப்­பிட்ட சில வட்­டா­ரங்­களை நாம் கூறி­யுள்ளோம். அதற்­க­மைய அமைந்தால் எமக்கு பிர­தி­நி­தித்­துவம் கிடைக்கும்.

இந்த பிர­தி­நி­தித்­துவப் பிரச்­சினைத் தொடர் பில் சம்­பந்­தப்­பட்ட தரப்­பிற்கு எடுத்துக் கூறி­னீர்­களா?

ஆம்! இது பற்றி நாம் கூறி­யுள்ளோம். எல்லை நிர்­ணயம் சம்­பந்­த­மான விட­யங்கள் குறித்து பிரச்­சி­ னைகள் எழு­மி­டத்து அது கவ­னிக்­கப்­படும் என்று எம்­மிடம் கூறி­யுள்ளார். தற்­ச­மயம் மலை­யக மக்­க­ளுக்குபாதிப்­புக்கள் ஏற்­படும் வகையில் இம்­மு­றைமை அமைந்தால் அத்­த­ரு­ணத்தில் நாங்கள் உரிய நிலை யில் தீர்­மானம் எடுப்போம்.

உத்சே அரசியல் திருத்தத்தில் இனப்பிரச்சினை தீர்வு குறித்து பேசப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலை யில் மலையக மக்களுக்கான தீர்வு எவ் வாறு அமைய வேண்டும் என நீங்கள் நினைக் கின்றீர்களா?

மலையக மக்கள் நாடளாவிய ரீதியில் செறிந்து வாழ்கின்றனர். இதன்போது எமது மக்களுக்கான தீர்வு எவ்வாறு இருக்க வேண்டும் என்ற எமது விருப் பத்தை மாத்திரமே நாம் கூற முடியும். அதன் தொடர்பில் தீர்மானம் எடுக்கும் நிலைமை பெரும் பான்மையைச் சார்ந்ததாகவே அமைந்துள்ளது. இது இன்று நேற்று ஏற்பட்ட விடயமல்ல சரித் திரத்திலேயே இவ்வாறான நிலைமையே காணப் படுகின்றது. பெரும்பான்மை மக்களுக்கு மலையக மக்களுக்கு எதுவும் செய்ய வேண்டும் என்ற சிந்தனையே இல்லை. இனப்பிரச்சினைத் தொடர் பில் வடக்கு , கிழக்கு மக்களுக்கு வழங்கும் தீர்வே மலையக மக்களுக்கு சாத்தியமானதாக அமையாது. எமது மக்களுக்கு உரியவாறு அமைவது சிறப்பு .

நேர்கண்டவர்: ஜீவா சதாசிவம்