பிரேசில் கால்பந்து ஜாம்பவான் பீலே பல வார சிகிச்சைக்குப் பிறகு வைத்தியசாலையில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

80 வயதான அவர் கடந்த செப்டம்பர் 4 அன்று தனது பெங்குடலில் உள்ள ஒரு கட்டியை அகற்றுவதற்கு அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார்.

அறுவை சிகிச்சைக்குப் பிறகு பல நாட்கள் தீவிர சிகிச்சையில் இருந்தார் பீலே.

இந் நிலையில் வியாழக்கிழமை சிகிச்சைகளின் பின்னர் வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ள பீலே, பிரேசில் நகரான சாவோ பாவுலோவில் அமைந்துள்ள ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் வைத்தியசாலையின் தன்னை கவனத்துக் கொண்ட ஊழியர்களுடன் இருந்து ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

Pele with the staff at Sao Paulo's Albert Einstein Hospital. Pic: Instagram/Pele

புகைப்படத்தை வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவில் தன்னை கவனத்துக் கொண்ட வைத்தியசாலையின் ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் பீலே.

வரலாற்றில் மூன்று உலகக் கிண்ணங்களை வென்ற அணியில் இடம்பிடித்த ஒரே வீரர் (1958, 1962 மற்றும் 1970) பீலே அனைத்து காலத்திலும் சிறந்த கால்பந்து வீரராக பலரால் கருதப்படுகிறார்.