(எம்.மனோசித்ரா)
கொவிட் அச்சுறுத்தல் காரணமாக நாடளாவிய ரீதியில் கடந்த ஆகஸ்ட் 20 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நாளைடன் நீக்கப்பட்டுள்ள நிலையில் , நாளை முதல் கடைபிடிக்க வேண்டிய சுகாதார வழிகாட்டல்கள் அடங்கிய சுற்றுநிரூபம் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தனவினால் வெளியிடப்பட்டுள்ளது.
அதற்கமைய நாளாந்தம் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை அத்தியாவசியமற்ற போக்குவரத்துக்களுக்கு அனுமதியளிக்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொது போக்குவரத்துக்களில் ஆசன எண்ணிக்கைக்கு அமையவே பயணிகள் அனுமதிக்கப்பட வேண்டும். அத்தோடு பயணிகள் சகலரும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். தொழிற்சாலைகள் , அத்தியாவசிய சேவை நிலையங்கள் தவிர்ந்த ஏனைய வேலைத்தளங்களில் அனைத்து சந்தர்ப்பங்களிலும் மட்டுப்படுத்தப்பட்டளவிலேயே ஊழியர்கள் அழைக்கப்பட வேண்டும்.
மறு அறிவித்தல் வரை பொது கூட்டங்கள் எவற்றுக்கும் அனுமதி வழங்கப்பட மாட்டாது. சுகாதார வழிகாட்டல்கள் பின்பற்றப்படுகின்றனவா என்பது தொடர்பில் பிரதேச சுகாதார மருத்துவ அதிகாரியின் கீழ் தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
தொழில் , சுகாதார தேவை மற்றும் அத்தியாவசிய பொருட் கொள்வனவு தவிர்ந்த வேறு எந்தவொரு காரணிக்காகவும் மாத்திரமே வீடுகளிலிருந்து வெளியில் செல்ல முடியும்.
உற்சவங்கள் எவற்றுக்கும் அனுமதி வழங்கப்பட மாட்டாது. பொருளாதார மத்திய நிலையங்களை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இம்மாதம் 15 ஆம் திகதி வரை விற்பனை நிலையங்களுக்கு 10 வீதமானோரும் , 15 ஆம் திகதியிலிருந்து 31 ஆம் திகதி வரை 20 சதவீதமானோரும் அனுமதிக்கப்படலாம்.
வங்கி உள்ளிட்ட நிதி நிறுவனங்களுக்குள் ஒரு சந்தர்ப்பத்தில் ஐவர் மாத்திரமே அனுமதிக்கப்பட வேண்டும். கட்டட நிர்மாணப்பணிகள் , விவசாய நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சிகை அலங்கார நிலையங்கள் , அழகு நிலையங்களுக்கு முன்னரே அனுமதி பெற்று ஒதுக்கப்பட்டுள்ள நேரத்தில் மாத்திரம் வாடிக்கையாளர்கள் அனுமதிக்கப்பட வேண்டும்.
கல்வி அமைச்சினால் திட்டமிடப்பட்டுள்ளதன் படி 200 க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலை முற்கட்டமாக திறப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஆரம்ப பாடசாலைகள் , பல்கலைக்கழகங்கள் வழங்கப்பட்டுள்ள வழிமுறைகளுக்கமைய ஆரம்பிக்கப்படலாம்.
தொழிற்பயிற்சி நிலையங்களில் 50 வீதமானோர் மாத்திரம் அனுமதிக்கப்பட வேண்டும். நீதிமன்ற நடவடிக்கைகள் சுகாதார விதிமுறைகளுக்கமைய முன்னெடுக்கப்படும். திரையரங்குகளை திறப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.
பதிவு திருமணங்களுக்கு இம்மாதம் 15 ஆம் திகதி வரை 10 பேருக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்படும். 15 ஆம் திகதியிலிருந்து 31 ஆம் திகதி வரை மண்டபமொன்றில் மொத்தமாகக் கலந்துகொள்ளக் கூடியவர்களில் 25 சதவீதமானோர் மாத்திரமே கலந்து கொள்ள வேண்டும். அதற்கான ஆகக்கூடிய எண்ணிக்கை 50 ஆகும்.
மரண சடங்குகளில் இம்மாதம் 15 ஆம் திகதி வரை 10 பேரும் , 15 - 31 ஆம் திகதி வரை 15 பேரும் கலந்து கொள்ள முடியும். மத வழிபாட்டு தளங்களில் கூட்டங்களுக்கு அனுமதி இல்லை. கண்காட்சி , சம்மேளனங்களுக்கு அனுமதி இல்லை. தனியார் வகுப்புக்களுக்கு அனுமதி இல்லை. தொழிற்சாலைகளை சுகாதார விதிமுறைகளுக்கமைய நடத்திச் செல்ல முடியும், எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM