கொரோனாத் தொற்று பாதித்தவர்கள் இரத்த தானம் செய்யலாமா..?

Published By: Digital Desk 2

30 Sep, 2021 | 06:44 PM
image

எம்மில் பலருக்கும் கொரோனாத் தொற்று பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்திருப்பார்கள். இவர்களில் பலருக்கு இரத்த தானம் செய்ய விருப்பமிருக்கும்.

ஆனால் இந்த தருணத்தில் குருதியை கொடையாக அளிக்கலாமா? கூடாதா? என்ற ஒரு சந்தேகம் எழும். அத்துடன் இரத்த தானத்தின் மூலம் மற்றவர்களுக்கு கொரோனாத் தொற்று பரவுமோ? என்ற சந்தேகமும் இருக்கும். 

இதற்கு மருத்துவ நிபுணர்கள் விளக்கமளிக்கையில்,''கொரோனாத் தொற்று பாதிப்பு ஏற்பட்டு குணமடைந்தவர்கள் மூன்று மாதத்திற்கு பிறகு இரத்த தானம் அளிக்கலாம்.

மேலும் தொற்று பாதிப்பிற்காக இரண்டு தடவை தடுப்பூசி செலுத்தி கொண்ட பிறகு, 15 நாட்கள் கழித்து இரத்த தானம் செய்யலாம். இதன்போது இரத்த தானம் அளிப்பவர்களுக்கும், ரத்ததானம் பெறுபவர்களுக்கும் எந்தவித பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கை கருதி இந்த கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் தடுப்பூசி செலுத்தி  கொண்டவர்களும், கொரோனாத் தொற்று பாதித்தவர்களும் வழங்கும் இரத்ததானத்தின் மூலமாகவோ அல்லது இத்தகைய குருதியை கொடையாக பெறுபவர்களுக்கோ இரத்த உறைவு பிரச்சனையோ அல்லது கொரோனாத் தொற்று பாதிப்பு பிரச்சினையோ ஏற்படும் என்பதற்கான ஆதாரப்பூர்வமான தகவல் எதுவும் இதுவரை இல்லை. இதனால் இது குறித்த அச்சம் தேவையில்லை.'' என்கிறார்கள்.

 அனுஷா

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹண்டிங்டன்ஸ் நோய் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-03-26 16:32:47
news-image

இடியோபதிக் பல்மனோரி ஃபைப்ரோசிஸ் எனும் நுரையீரல்...

2024-03-24 21:02:07
news-image

அர்த்ரால்ஜியா எனும் மூட்டு வலி பாதிப்பிற்குரிய...

2024-03-20 21:20:55
news-image

செபோர்ஹெக் கெரடோசிஸ் எனும் தோல் பாதிப்பிற்குரிய...

2024-03-20 09:17:28
news-image

குரல்வளை வீக்கம் : நவீன சிகிச்சை

2024-03-18 18:23:28
news-image

ஆர்டியோஸ்கிளிரோஸிஸ் ரெட்டினோபதி எனும் விழித்திரை பாதிப்பிற்குரிய...

2024-03-16 14:38:19
news-image

உள்காது பாதிப்புகளை கண்டறிவதற்கான நவீன பரிசோதனைகள்

2024-03-15 18:16:00
news-image

பெருங்குடல் வீக்கமும் நவீன சிகிச்சையும் 

2024-03-14 16:20:48
news-image

சிறுநீரக ஆரோக்கியம், அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம்!...

2024-03-14 15:59:51
news-image

ஆசனவாய் புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் சத்திர...

2024-03-13 22:50:05
news-image

மயோகார்டிடிஸ் எனும் இதய தசையில் ஏற்படும்...

2024-03-08 17:40:06
news-image

நான் ஆல்கஹாலிக் ஃபேட்டி லிவர் எனும்...

2024-03-07 13:48:04