பாணந்துறை கடற்பகுதியில் நேற்று (16)  காணாமல் போயிருந்த இரண்டு இளைஞர்கள் இன்று (17) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த இருவரின் சடலங்களும் பாணந்துறை வாதுவ கடற்பகுதியில் வைத்து மீட்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்கள் வெனிவல்கொல பகுதியைச் சேர்ந்த புத்திக ரொஷான் (19) மற்றும் ஜீவன் குமார (22) என அடையாளம் காணப்பட்டுள்ளது.