(எம்.எப்.எம்.பஸீர்)
சி.ஐ.டி. எனும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணைக்காக இன்று வியாழக்கிழமை சி.ஐ.டி.யில் ஆஜராகிய காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்காரவிடம் சுமார் மூன்று மணி நேரம் விஷேட விசாரணைகள் நடாத்தப்பட்டன. அதன் பின்னர் அவர் அங்கிருந்து வெளியேறிச் சென்றார்.
காலை 8.40 மணியளவில் சி.ஐ.டி.யின் டிஜிட்டல் பகுப்பாய்வுப் பிரிவில் ஆஜரான மனுஷ நாணயக்காரவிடம், அதன் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் எஸ். எம். சேனாரத்ன தலைமையிலான குழுவினரால் மு.ப.11.50 மணி வரை விசாரணையும், இதன்போது அவரிடம் விஷேட வாக்கு மூலம் ஒன்றும் பதிவு செய்யப்பட்டதாக சி.ஐ.டி.யின் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் தரவுக் கட்டமைப்பு தகவல்கள் அழிந்தமை தொடர்பில் அவ்வதிகார சபை தலைவர் வைத்தியர் ரசிக்க விஜேவர்தன செய்த முறைப்பாட்டுக்கு அமையவும், ரெலிகொம் நிறுவனத்தின் சமூக பாதுகாப்பு தொடர்பிலான பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரால் நிர்மல் தர்மரத்னவின் முறைப்பாடு தொடர்பிலும் இந்த விசாரணைகள் இடம்பெற்றதாக அந்த அதிகாரி கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM