"கொவிட் தொற்றின் காரணமான பின்னடைவுகளுக்கு மத்தியிலும், இலங்கையின் உள்ளூர் ஸ்மார்ட்-பயனர்களின் போக்குகளுடன் realme உற்சாகமாக பயணிக்கிறது" ஷான் யான், சந்தைப்படுத்தல் முகாமையாளர். 

realme இலங்கையிலுள்ள இளைஞர்கள், கட்டுப்படியான விலையில், புத்தாக்க அறிமுகங்களை அடைவதை தொடர்ந்தும் உறுதிப்படுத்தும்

கடந்த நவம்பர் 2020 இல் இலங்கை சந்தையில் அறிமுகமான realme, மிக வேகமாக வளர்ந்து வரும் ஸ்மார்ட்போன் வர்த்தக நாமங்களில் ஒன்றாக திகழ்கிறது. கொவிட் தொற்று மற்றும் சவால் மிகுந்த சந்தை நடவடிக்கைகள் காரணமான பின்னடைவுகள் இருந்தபோதிலும், realme ஆனது தொழில்நுட்ப ஆர்வமுள்ள உள்ளூர் இளைஞர்களுடன் இணைந்து தெற்காசிய பிராந்தியத்திலுள்ள மிக முக்கியமான சந்தையான இலங்கையில் அதன் எதிர்காலத்தை நிர்ணயம் செய்துள்ளது.

1. கேள்வி: நீங்கள் 2020 டிசம்பரில் (நவம்பர்) இலங்கையில் உங்கள் அறிமுகத்தை மேற்கொண்ட  போது இலங்கை சந்தையில் நீங்கள் அவதானித்த விடயம் என்ன?

பதில்: உலகம் முழுவதும் தொலைத்தொடர்பு தொழில்நுட்பங்களின் வளர்ச்சி மற்றும் இலங்கையிலுள்ள நுகர்வோர் புதிய தொழில்நுட்பங்களை பின்தொடர்வதில் கொண்டுள்ள ஆர்வம், உயர் மட்டத்திலான புத்தாக்க ஸ்மார்ட் சாதனங்களின் அனுபவத்தை பெறுவதில் அவர்களிடமிருந்த ஆர்வம் போன்றவற்றை நாம் கவனித்தோம். 

ஒரு சில ஆசிய சந்தைகளுடன் ஒப்பிடுகையில், இலங்கையில் ஸ்மார்ட்போன் நுகர்விற்கு அவற்றால் இன்னும் ஈடுகொடுக்க முடியவில்லை, குறிப்பிட்ட தெரிவுகளைக் கொண்ட சாதாரண கையடக்கத் தொலைபேசிகள் கொழும்புக்கு வெளியே இன்னும் ஒரு முக்கிய தெரிவாக இருந்த போதிலும், அதிலிருந்து அவர்கள் மாறுகின்ற வீதம் வேகமாக அதிகரித்து வருகின்றது என நாம் நம்புகிறோம். 

எனவே, எதிர்காலத்தில் தொலைபேசி வலையமைப்பு சேவை வழங்குநர்கள் 2G, 3G, 4G வலையமைப்புகளிலிருந்து உயர் செயல்திறன் கொண்ட 5G தொழில்நுட்பங்களுக்கு மாறுவார்களென நாம் நம்புகிறோம். அதற்கான சாத்தியமே ஸ்மார்ட் போன் துறையின் சந்தை வளர்ச்சிக்கு வாய்ப்புகளை ஏற்படுத்துகிறது.

அது மாத்திரமன்றி, இலங்கையில் உள்ள இளம் தலைமுறையினர் தொழில்நுட்ப ஆர்வலர்களாக இருப்பதையும், அவர்கள் ஸ்மார்ட் போன்களை ஒரு அத்தியாவசிய பொருளாக தெரிவு செய்வதையும் காண்கின்றோம். அந்த வகையில், இளம் தலைமுறையினரின் விருப்பத்தை ஈடுசெய்யும் ஸ்மார்ட் போன் மற்றும் AIoT சாதனங்களின் வர்த்தக நாமமாக இருப்பதற்கு realme முடிவு செய்தது. 

இலங்கை இளைஞர்கள் புதிய தொழில்நுட்பங்களை அனுபவிப்பது தொடர்பில் அவர்களுக்குள்ள இடைவெளிகளை கடக்கும் பாலமாகவும் அதனை அடைவதற்கான கதவுகளை திறப்பதற்காகவும், அவர்களுக்கு அவசியமான உயர் தர அம்சங்கள், தரமான, புதிய போக்கிலான வடிவமைப்பு ஆகிய அம்சங்கள் கொண்ட சாதனங்களை கட்டுப்படியான விலையில் வழங்குவதன் மூலம் நாம் அவர்களுக்கு வழிவகை செய்துள்ளோம்.

2. கேள்வி: ஒரு மிகை நிலை கொண்ட சந்தையில், ஒரு ஸ்மார்ட்போன் வர்த்தக நாமமாக உங்கள் போட்டி நிலையின் எல்லை யாது?

பதில்: இத்தொழில்துறையில், ஒப்பீட்டளவில் புதியவராக இருந்தாலும், realme ஆனது, எமது பயனர் இலக்கிற்கு நடுவில் மிகவும் சிறப்பாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது. அது ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து உலகம் முழுவதும் வேகமாக வளர்ந்து வரும் வர்த்தகக்குறியீடாக மாறியுள்ளது.

 எனவே, உலகளாவிய வளர்ந்து வரும் நுகர்வோர் தொழில்நுட்ப நிறுவனம் எனும் வகையில், எமது நுகர்வோருக்கு நவீன தொழில்நுட்பத்தை அடைவதை மேலும் இலகுபடுத்தியுள்ளதன் மூலம், ஸ்மார்ட்போன் மற்றும் AIoT சந்தையில் நாம் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளோம். இலங்கையிலும் அதே தத்துவம் பயன்படுத்தப்பட்டுள்ளதுடன், நுகர்வோருக்கு புதுமையான ஸ்மார்ட் சாதனங்களை கொண்டு வருவதன் மூலம் இலங்கை இளைஞர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதில் realme முன்னிற்கிறது.

3. கேள்வி: உள்ளூர் சந்தையில் நுழைந்த பின்னர், கொவிட் தொற்றின் பின்புலத்தில், வணிக ரீதியில் realme எவ்வாறான உத்திகள் மற்றும் ஏனைய விடயங்களை கைக்கொண்டுள்ளது?

பதில் : கொவிட் தொற்று நிலைமை அனைவருக்கும் கடினமான ஒன்றாக அமைந்துள்ளது. அத்துடன் பொருளாதார இழப்புகளுக்கான வெளிப்படையான சாத்தியக்கூறுகள் உள்ளதால், அனைத்து தொழில்துறைகளும் தமது வழக்கமான வர்த்தக நடவடிக்கைகளை தொடர்வது மிகப்பெரிய சவாலாக அமைந்துள்ளது. 

தனிமைப்படுத்தல் ஊரடங்கு, பயணக் கட்டுப்பாடுகள் என்பவற்றின் காரணமாக நிலைமை மோசமடைந்து வரும் நிலையில், ஸ்மார்ட் மொபைல் விற்பனையாளராகிய நாமும் பாதிக்கப்பட்டுள்ளோம். எவ்வாறாயினும், நாம் மீளெழுச்சி பெறுவதில் கவனம் செலுத்தினோம். ஒன்லைன் கல்வி மற்றும் வீட்டிலிருந்து பணி தேவைகளின் அதிகரிப்பின் பின்னணியில் இலங்கை இளைஞர்களிடையே நிலையான தொழில்நுட்ப பயன்பாட்டு மாற்றத்தை எவ்வாறு செயல்படுத்த முடியும் என்பதில் எமது கவனத்தை செலுத்தினோம். சந்தையின் இயக்கங்கள் சவாலானதாக இருந்த போதிலும், நுகர்வோரின் தேவை தொடர்பில் அக்கறை கொண்டுள்ள realme, கட்டுப்படியாகும் விலையிலும், சிறந்த சேவையுடனுமான சாதனங்களை அவர்களுக்கு தொடர்ந்தும் வழங்கும்.

4. கேள்வி: 2021 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் realme இனது செயல்திறன் மற்றும் விற்பனை ரீதியில் நீங்கள் பயன்படுத்திய புதிய மார்க்கங்கள் குறித்து உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ள முடியுமா?

பதில்: உலகளவிய ரீதியில் வேகமாக வளர்ந்து வரும் தரக்குறியீடு எனும் வகையில், இலங்கையின் இளம் நுகர்வோர் மத்தியில் தயாரிப்புகள் தொடர்பில் அதிகரித்து வரும் விழிப்புணர்வுகள் காரணமாக, இலங்கைச் சந்தையில் ஒப்பீட்டளவிலான வெற்றியை realme அடைந்துள்ளது. 

realme C தொடர்: C11, C12, C15, C20, C11-2021; realme number தொடர்: realme 7, realme 8 போன்ற ஸ்மார்ட் போன்கள் உட்பட பல்வேறு சாதனங்களை realme சந்தைக்கு அறிமுகப்படுத்தியது. அது மாத்திரமன்றி realme Buds Q, Buds Q2, Buds Air 2, Buds Air 2 Neo, Wireless 2 Neo உள்ளிட்ட ஸ்மார்ட் ஓடியோ போன்ற AIoT சாதனங்கள்; realme watch 2 போன்ற ஸ்மார்ட் அணிகலன் சாதனங்களையும்  அது அறிமுகம் செய்துள்ளது. 

அவ்வாறே, சில மாதங்களுக்கு முன்னர் realme, வெற்றிகரமாக பல்வேறு முன்னணி விநியோக பங்காளர்களான Abans, Singhagiri, Dialog, Seetha ஊடாகவும், நாடு முழுவதும் 1,000 இற்கும் மேற்பட்ட அங்கீகரிக்கப்பட்ட விற்பனை முகவர்கள் ஊடாகவும் realme அதன் விற்பனையை பலப்படுத்தியுள்ளது.

5. கேள்வி: realme ஶ்ரீ லங்காவின் எதிர்காலத் திட்டங்கள் என்ன?

பதில்: "1+5+T" என்பதே realme இனது திட்டமாகும். 1 ஸ்மார்ட்போன் - அதன் AIoT தொகுதி அமைப்பின் மையம், realme இன் AIoT தயாரிப்புகளுக்கான 5 முக்கிய பிரிவுகளான, True Wireless Stereo (TWS), ஸ்மார்ட் அணிகலன்கள், தொலைக்காட்சி, மடிகணனிகள், டெப்லெட் உள்ளிட்டவை இதில் அடங்குகின்றன. T என்பது realme யின் திறந்த கூட்டாளர் தளமான TechLife என்பதைக் குறிக்கிறது. 

இது Realme இன் சொந்த விற்பனை மார்க்கங்கள் மற்றும் விநியோகச் சங்கிலிகளைப் பகிர்வதன் மூலம் புதுமையான மற்றும் மாற்றமடையும் AIoT தொடக்கங்களை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த புள்ளிகளை இணைப்பது realme Link App ஆகும். realme ஸ்ரீலங்கா ஆனது, realme இனது ஒட்டுமொத்த 1+5+T அனுபவத்தை இலங்கைக்கு கொண்டு வரும் நோக்கில் தொடர்ந்தும் பணியாற்றும். இது எதிர்காலத்தில் நாட்டில் realme சூழல் தொகுதியின் உண்மையான நறுமணத்தை ஏற்படுத்தும்.