சட்டவிரோத மதுபானத்துடன் 4 சந்தேகநபர்கள் கைது

Published By: Gayathri

30 Sep, 2021 | 04:42 PM
image

(எம்.மனோசித்ரா)

பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸாரால் நாட்டின் சில பிரதேசங்களில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புக்களில் சட்ட விரோத மதுபானத்துடன் சந்தேகநபர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் ராகமை பொலிஸ் பிரிவில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் 330 லீற்றர் சட்டவிரோத மதுபானம், 1660 லீற்றர் கோடா, 5 சமையல் எரிவாயு சிலிண்டர்கள், எரிவாயு அடுப்பு என்பவற்றுடன் 25, 34 வயதுடைய ராகம பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேபோன்று கதிர்காமம் பொலிஸ் பிரிவில் கதிர்காமம் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றி வளைப்பில் 20 லீற்றர் சட்ட விரோத மதுபானத்துடன் 41 வயதுடைய தெடலமுவ பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வேயங்கொட பொலிஸ் பிரிவில் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட சுற்றி வளைப்பில் 67 லீற்றர் சட்ட விரோத மதுபானம் , 717 லீற்றர் கோடா என்பவற்றுடன் 50 வயதுடைய சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்களுக்கான நன்மைகளை படிப்படியாக அழித்து வரும்...

2025-03-23 17:54:24
news-image

நாணய நிதியத்தின் தேவைக்காக தயாரிக்கப்பட்டுள்ள பட்ஜட்...

2025-03-23 16:42:49
news-image

ஜி.எஸ்.பி. பிளஸ் வரி சலுகையைப் பாதுகாக்க...

2025-03-23 16:34:05
news-image

காய்ச்சல் காரணமாக யாழ். போதனா வைத்தியசாலையில்...

2025-03-23 21:51:48
news-image

ஏப்ரல் 28 இல் ஆய்வுக்காக இலங்கை...

2025-03-23 17:55:39
news-image

யோஷிதவுடன் இரவு விடுதிக்கு சென்றவர்கள் -பாதுகாப்பு...

2025-03-23 21:09:20
news-image

சகல தொழிற்சங்கங்களுடனும் இணைந்து தொழிற்சங்க நடவடிக்கையில்...

2025-03-23 17:49:19
news-image

சுகாதார துறையின் அபிவிருத்தி: ஐ.நா திட்ட...

2025-03-23 20:40:52
news-image

வீட்டிலிருந்து உணவு வழங்க அனுமதியுங்கள் -...

2025-03-23 20:01:41
news-image

பாராளுமன்றத்தால் தேசபந்துவை பதவி நீக்க முடியாது...

2025-03-23 19:46:55
news-image

ஏப்ரல் 8இல் அரச சொத்துக்களை மீட்பதற்கான...

2025-03-23 16:20:07
news-image

யாழ். பல்கலைக்கழகத்தில் தமிழ் துறையில் பட்டம்...

2025-03-23 18:17:22