கண்டி, அனிவத்தைப் பிரதேசத்தில் வைத்து தாய்லந்து நாட்டுப் பெண் ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

பொலிஸாருக்குக் கிடைத்த விசேட தகவல் ஒன்றின்படி பெண் தங்கியிருந்த இடத்தை முற்றுகையிட்ட பொலிசார் 31 வயதுடைய தாய்லாந்துப் பெண்ணை கைதுசெய்துள்ளனர்.

குறித்த பெண் விபசார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த  தாய்லாந்துப் பெண்ணை கண்டி நீதிவான் முன் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.