Published by T. Saranya on 2021-09-30 15:57:10
அங்கீகரிக்கப்பட்ட அனைத்து தடுப்பூசிகளையும் பற்றிய போலி தகவல்களை பரப்பும் உள்ளடக்கத்தை நீக்குவதாக யூடியூப் தெரிவித்துள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகள் ஆபத்தானவை, நாள்பட்ட உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தும் என பொய்யான செய்திகளை பரப்பும் காணொளிகள் நீக்கப்படும். கொரோனா தடுப்பூசி குறித்து மட்டுமில்லாது அங்கீகரிக்கப்பட்ட எந்த தடுப்பூசி குறித்தும் தவறான கருத்துகளை பரப்பும் பட்சத்தில் அந்த காணொளிகள் நீக்கப்படும் எனவும் தெரிவித்து உள்ளது.
தடுப்பூசிக்கு எதிர்ப்பு தெரிவிப்பதில் செல்வாக்கு செலுத்துபவர்களின் கணக்குகளை முடக்குவதும் கொள்கையில் அடங்கும்.
தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் தளங்களில் போலித் சுகாதார தகவல்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வில்லை என்று விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறன்றது.
இதேவேளை, கடந்த ஜூலை மாதம் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், போலித் தகவல்களை பரப்புவதன் மூலம் தடுப்பூசி போடுவதில் மக்கள் சந்தேகம் கொள்வதற்கு சமூக வலைத்தளங்கள் பெரும்பாலும் பொறுப்பாகும் என்றும், இந்த பிரச்சினையை தீர்க்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.
தடுப்பூசிகள் குறித்த தவறான கருத்துகளை காணொளிகள் மூலம் பரப்பினால் அந்த காணொளிகள் நீக்கப்படும் என அந்த நிறுவனம் கூறி உள்ளது. கடந்த ஆண்டு முதல் கொரோனா தடுப்பூசி கொள்கைகளை மீறியதற்காக 1,30,000 க்கும் மேற்பட்ட காணொளிகளை நீக்கியுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்து உள்ளது.
உலக சுகாதார நிறுவனம் மற்றும் மருத்துவ அதிகாரிகளால் அங்கீகரிக்கப்பட்ட பாதுகாப்பான மற்றும் பயனுள்ள, தடுப்பூசிகள் குறித்த உறுதிப்படுத்தப்பட்ட புதிய வழிகாட்டுதல்களுடன் புதிய மருத்துவ கொள்கைகளை யூடியூப் நிறுவனம் வெளியிட்டு உள்ளது.
பெப்ரவரியில் பேஸ்புக் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட இதேபோன்ற தடையைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மார்ச் மாதத்தில், டுவிட்டர் தடுப்பூசிகள் பற்றி தவறான தகவலைதொடர்ந்து பகிர்ந்து கொள்ளும் பயனர்களை தங்கள் தளத்திலிருந்து இருந்து தடை செய்ய உள்ளதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்த்க்கது.