மனுஷவை சி.ஐ.டி.க்கு அழைத்து உண்மை பிரச்சினைகளை மறைக்கும் திட்டத்தில் அரசாங்கம் - சஜித் குற்றச்சாட்டு

Published By: Vishnu

30 Sep, 2021 | 11:57 AM
image

பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்காரவை குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வரவழைத்து உண்மையான பிரச்சினைகளை மறைக்கும் திட்டத்தில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 

மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்தும் ஊடகவியலாளர்கள் மற்றும் பத்திரிகை ஆசிரியர்களை வரவழைக்கும் அரசாங்கம் அத்தகைய பொது பிரதிநிதிகளை சி.ஐ.டி.க்கு அழைப்பதில் ஆச்சரியமில்லை என்று அவர் கூறினார்.

தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் தரவுகள் அழிக்கப்பட்டமை விவகாரம் குறித்து பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்காரவினால் தெரிவிக்கப்பட்ட கருத்து தொடர்பில் ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தினால் அளிக்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமையவே அவர்  குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜரமாகுமாறு மனுஷ நாணயக்கார அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந் நிலையில் அது தொடர்பான விசாரணைக்காக மனுஷ நாணயக்கார இன்று காலை சி.ஐ.டி.யில் ஆஜராகும்வேளையில் அவருடன் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோரும் சி.ஐ.டி.க்கு சென்றிருந்தனர்.

இதன்போதே ஊடகவியலாளர்கள் முன்னிலையில் மேற்கண்ட கருத்தினை தெரிவித்த சஜித் பிரேமதாச, 

மக்களுக்கு தடுப்பூசி போடுவது மற்றும் அத்தியாவசிய மருந்துகளை இறக்குமதி செய்வது போன்ற அறிவியல் விடயங்களில் கட்டுக்கதையின் பின்னால் இருந்த அரசாங்கம், நாட்டில் பொய்களையும் வஞ்சகங்களையும் பரப்பியது என்றார். 

சட்டமா அதிபர் திணைக்களத்தின் கருத்து, தரவை அழிக்கும் செயல்முறைக்குப் பின்னால் போதைப்பொருள் மாஃபியா இருப்பதாகவும், அவர்கள் வெளியிட்ட வெளிப்பாடுகள் மிகவும் தீவிரமானவை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் கூறினார்.

மேலும் தேசிய பாதுகாப்பு ஒரு பெரிய பிரச்சினை என்றும் பொய்யான வதந்திகளை முன்வைத்து மக்களை தவறாக வழிநடத்தி குழப்பமடையச் செய்வது பொறுப்பான அரசு அல்ல.

ஊடகங்களை ஒடுக்குதல், பொது ஊழியர்களை ஒடுக்குதல், மனித சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தை மீறுவதன் மூலம் ஒரு நாடு முன்னேற முடியாது.

தற்போதைய அரசாங்கம் இந்த நாட்டிற்கு ஒரு துரதிர்ஷ்டவசமான விதியை ஏற்படுத்தியுள்ளது என்றும் அவர் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பதுளை - பண்டாரவளை வீதியில் விபத்து...

2025-03-24 10:40:07
news-image

முச்சக்கரவண்டி - லொறி மோதி விபத்து...

2025-03-24 10:16:56
news-image

வத்தளையில் ஆணின் சடலம் மீட்பு!

2025-03-24 10:25:37
news-image

சிரேஷ்ட ஊடகவியலாளர் தாஹா முஸம்மில் காலமானார்!...

2025-03-24 10:05:01
news-image

யாழில் அதிகரிக்கும் இணைய நிதி மோசடி...

2025-03-24 09:50:15
news-image

தென்னஞ்செய்கையாளர்களுக்கு உர மானியங்கள் வழங்க நடவடிக்கை...

2025-03-24 09:26:27
news-image

“இன்ஸ்டாகிராம் களியாட்ட நிகழ்வு” : 57...

2025-03-24 09:14:28
news-image

இன்றைய வானிலை

2025-03-24 06:37:57
news-image

வாக்குகளுக்காக வேலையற்ற பட்டதாரிகளுக்கு அரசாங்கம் பொய்யான...

2025-03-24 03:22:42
news-image

நாடளாவிய ரீதியில் 3 தேர்தல் முறைப்பாடுகள்...

2025-03-24 03:16:05
news-image

சர்வதேசத்தின் மத்தியில் பாதுகாப்பு படையினரை காட்டிக்...

2025-03-24 03:09:11
news-image

சீனாவின் K-18 விமானங்களை பரிசோதனை செய்கிறது...

2025-03-24 03:04:35