பதுளை, ஹாலிஎல பகுதியில் தந்தையை கூறிய ஆயுதத்தால் தாக்கி 16 வயது மகன் கொலை செய்துள்ளார்.

மதுபோதையில் வந்த தந்தை தனது தாயாரை தாக்கியதால்  கோபமடைந்த மகன் தாக்கியுள்ளார்.

அதில் படுகாயமடைந்த தந்தை வீட்டிற்கு வெளியில் சென்ற நிலையில் உயிரிழந்துள்ளார். 

இந்நிலையில் மகன் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

இதேவேளை மாதம்பே - தம்பகல்ல பகுதியில் தந்தையை தடியால் தாக்கி மகன் கொலைசெய்துள்ளார்.

மதுபோதையில் வந்த தந்தையுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக இவர் தந்தையை கொலை செய்துள்ளார்.

உயிரிழந்தவர் 75 வயதான  முன்னாள் பொலிஸ் அதிகாரியென தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் குறித்த மகன் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன்  மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.