சந்திரிகா குமாரதுங்கவை இணைத்துக்கொண்டு பயணிக்க தயார் - சுதந்திர கட்சி பொதுச் செயலாளர்

Published By: Digital Desk 3

30 Sep, 2021 | 10:55 AM
image

(எம்.மனோசித்ரா)

சுதந்திர கட்சியிலிருந்து யாரையும் நீக்கும் வகையில் செயற்படப் போவதில்லை. மாறாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க மற்றும் எமது கட்சியில் இணைய விரும்பும் எந்தவொரு நபரையும் இணைத்துக் கொண்டு முன்னோக்கி பயணிக்க நாம் எதிர்பார்த்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

குருணாகல் பிரதேசத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடவியலாளர்களால் கேள்வியெழுப்பப்பட்ட போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன ஆவார். பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தற்போது ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினராகவே உள்ளார். அவ்வாறிருக்கையில் அவரால் எவ்வாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுடன் இணைந்து புதிய அரசியல் பயணத்தை தொடர முடியும்?

ஆனால் அவருக்கு சுதந்திர கட்சியுடன் இணைந்து பயணிக்க முடியும். அதே போன்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவையும் இணைத்துக் கொண்டு, எமது கட்சியில் இணைய விரும்பும் எந்தவொரு நபரையும் இணைத்துக் கொண்டு முன்னோக்கி பயணிக்க நாம் எதிர்பார்த்துள்ளோம்.

எனவே யாரையும் கட்சியிலிருந்து நீக்கும் வகையில் செயற்படப் போவதில்லை. சகலரையும் கட்சியுன் இணைத்துக் கொள்வதிலேயே அவதானம் செலுத்தியுள்ளோம். முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமைத்துவத்தின் கீழ் நாம் அனைவரும் முன்னோக்கி பயணிக்க வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54