ராஜஸ்தானுடனான மோதலில் 7 விக்கெட்டுகளினால் பெங்களூரு வெற்றி

Published By: Vishnu

30 Sep, 2021 | 08:43 AM
image

ராஜஸ்தான் அணிக்கு எதிரான நேற்றைய ஐ.பி.எல். போட்டியில் பெங்களூரு அணி 7 விக்கெட்டுகளினால் வெற்றிபெற்றுள்ளது.

2021 இந்தியன் பிரீமியர் லீக்கின் 43 ஆவது போட்டி சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ரோயலுக்கும், விராட் கோஹ்லி தலைமையிலான ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கும் இடையில் நேற்றிரவு டுபாயில் ஆரம்பமானது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பெங்களூரு அணி முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பினை ராஜஸ்தானுக்கு வழங்கியது.

எவன் லூயிஸ் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோரின் பலமான ஆரம்ப இணைப்பாட்டத்துடன், ரன் வேட்டையை ஆரம்பித்த ராஜஸ்தான் 8 ஓவர்களின் நிறைவில் விக்கெட் இழப்பின்றி 71 ஓட்டங்களை பெற்றது.

எவன் லூயிஸ் 46 ஒட்டங்களுடனும், ஜெய்ஸ்வால் 25 ஓட்டங்களுடனும் பெங்களூரு அணியின் பந்து வீச்சுகளை துவம்சம் செய்து வந்தனர்.

பின்னர் ஒன்பதாவது ஓவரின் இரண்டாவது பந்து வீச்சில் ஜெய்ஸ்வால் 31 ஓட்டங்களுடன் கிறிஸ்டியனின் பந்து வீச்சில் சிராஜ்ஜிடம் பிடிகொடுத்து வெளியேறினார்.

தொடர்ந்து ராஜஸ்தான் அணித் தலைவரும் அதிரடி ஆட்டக்காரருமான சஞ்சு சம்சனுடன் கைார்த்த லூயிஸும் சற்று நேரம் நின்று நிலைத்தாடி அரைசதம் பெற்றார்.

எனினும் அவர் 11.1 ஆவது ஓவரில் மொத்தமாக 37 பந்துகளை எதிர்கொண்டு 3 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகள் அடங்கலாக 58 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

இதன்போது அணியின் ஓட்ட எண்ணிக்கை 100 ஓட்டங்களாக இருந்தது. 

லூயிஸின் வெளியேற்றத்தின் பின்னர் களமிறங்கிய ராஜஸ்தான் வீரர்கள் ஒருவர் பின் ஒருவராக தொடர்ச்சியாக ஆட்டமிழந்து வெளியேறினார். இதனால் ஒட்டங்களை பெற்றுக் கொள்வது பாரிய சவால் ஆனது.

இறுதியாக நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 149 ஓட்டங்களை மாத்திரமே அவர்களால் பெற முடிந்தது.

பந்து வீச்சில் பெங்களூரு அணி சார்பில் ஹர்ஷல் படேல் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். இந்த மூன்று விக்கெட்டுகளும் அவரது இறுதி ஓவரின் பெற்றுக் கொண்டவை ஆகும். 

ஹர்ஷல் படேல் தவிர ஷாபாஸ் அகமட், சாஹல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், கிறிஸ்டியன் மற்றும் ஜார்ஜ் கார்டன் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

150 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 17.1 ஓவரில் மூன்று விக்கெட்டினை இழந்து 153 ஓட்டங்களை பெற்று வெற்றியிலக்கை கடந்தது.

பெங்களூரு சார்பில் ஆரம்ப வீரர்களாக களமிறங்கிய தேவதூத் படிக்கல் 22 ஓட்டங்களுடனும், விராட் கோஹ்லி 25 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்க மூன்றாவது விக்கெட்டுக்காக களமிறங்கிய ஸ்ரீகர் பாரத் 44 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார்.

மெக்ஸ்வேல் மொத்தமாக 30 பந்துகளில் ஒரு சிக்ஸர், 6 பவுண்டரிகள் அடங்கலாக 50 ஓட்டங்களுடனும், ஏ.பி.டி.வில்லியர்ஸ் நான்கு ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

இதனிடையே தனது டி-20 கிரிக்கெட் அரங்கில் மெக்ஸ்வெல் 7 ஆயிரம் ஓட்டங்களை 16.1 ஆவது ஓவரில் மெக்ஸ்வெல் கடந்தமை விசேட அம்சமாகும்.

இது இவ்வாறிருக்க இன்று இரவு சார்ஜாவில் ஆரம்பமாகும் 44 ஆவது லீக் போட்டியில் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் சென்னையும் இறுதி இடத்தில் இருக்கும் ஹைதராபாத் அணிகளும் மோதவுள்ளன. 

Photo Credit ; ‍IPL2021

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உலகக் கிண்ணத்துக்கு சிறந்த அணியை கட்டியெழுப்புவதை...

2025-02-11 19:22:29
news-image

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இலங்கை...

2025-02-11 09:21:46
news-image

ரோஹித் ஷர்மா 32ஆவது ஒருநாள் சதம்...

2025-02-10 12:42:11
news-image

இரண்டாவது டெஸ்டில் இலங்கையை 9 விக்கெட்களால்...

2025-02-09 16:26:20
news-image

14 வயதின் கீழ் பாடசாலை சமபோஷ...

2025-02-09 11:13:16
news-image

மூத்த வீரர்களுக்கான கால்பந்தாட்ட சமரில்; எட்டு...

2025-02-08 20:52:34
news-image

திமுத் கருணாரட்னவின் கடைசித் துடுப்பாட்டம்; நாளை...

2025-02-08 20:49:02
news-image

இலங்கைக்கு எதிரான தொடரில் முழுமையான வெற்றியின்...

2025-02-08 20:46:18
news-image

14ஆவது இந்துக்களின் சமர்: கொழும்பு இந்துவை...

2025-02-08 21:05:32
news-image

குசல் மெண்டிஸின் அரைச் சதம் இலங்கைக்கு...

2025-02-07 20:48:52
news-image

14ஆவது இந்துக்களின் சமர்: பலமான நிலையில்...

2025-02-07 20:17:12
news-image

ஜடேஜாவின் துல்லியமான பந்துவீச்சு, கில், ஐயர்,...

2025-02-07 17:05:20