சீனா, இந்தியா, அமரிக்கா இல்லை என்றால் சுவாசிக்கவும் முடியாத நிலையில் இலங்கையின் நிலை - சுதந்திரக் கட்சி

Published By: Digital Desk 4

29 Sep, 2021 | 08:55 PM
image

(எம்.மனோசித்ரா)

சர்வதேச வல்லரசு நாடுகளின் கேந்திர நிலையமாக மாறியுள்ள இலங்கையானது,  சீனா , இந்தியா , அமரிக்கா ஆகிய நாடுகள் இல்லை என்றால் சுவாசிக்கவும் முடியாது என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

கடந்த 15 ஆண்டுகளாக எடுக்கப்பட்ட தீர்மானங்களின் பிரதிபலனே இந்த சீரழிவாகும் என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தீர்மானம் இன்று | Virakesari.lk

நாட்டுக்கு முதலீடுகள் அவசியமாகும். ஆனால் முதலீகளின் போது நாட்டின் இறையாண்மைக்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கு இடமளிக்க முடியாது.

அமெரிக்காவின் தேவைக்கேற்ப இலங்கைக்கு மின் விநியோகத்தை வழங்க தன்னிச்சையான அதிகாரம் வழங்கப்படுமாயின் அது இலங்கையின் இறையான்மையை கேள்விக்குட்படுத்தும் என்றும் தயாசிறி ஜயசேகர சுட்டிக்காட்டினார்.

குருணாகல் பிரதேசத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

கெரவலப்பிட்டி மின்உற்பத்தி நிலைய விவகாரம் தொடர்பில் விரைவில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாட எதிர்பார்த்துள்ளோம்.

தேசிய சொத்துக்கள் விற்கப்பட மாட்டாது என்று தெரிவித்து ஆட்சியை கைப்பற்றிய அரசாங்கம் அவற்றை விற்பனை செய்யும் போது பல பிரச்சினைகள் ஏற்படும். அது மாத்திரமல்ல.

நாட்டில் மின் நுகர்வு 3500 மெகா வோல்ட் ஆகும். இதில் 1684 மெகாவோல்ட் ஒரு நிறுவனத்திற்கு வழங்கப்படுவதானது அமெரிக்காவாக இருந்தாலும் , சீனாவாக இருந்தாலும், இந்தியாவாக இருந்தாலும் அதனை ஏற்றுக் கொள்ள முடியாது.

இதனால் பாரிய பிரச்சினைகள் ஏற்படக் கூடும். எனவே தான் இது தொடர்பில் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம்.

நாட்டுக்கு முதலீடுகள் அவசியமாகும். ஆனால் முதலீகளின் போது நாட்டின் இறையாண்மைக்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கு இடமளிக்க முடியாது.

அமெரிக்காவுக்கு தேவையானவாறு இலங்கைக்கு மின் விநியோகத்தை வழங்க தன்னிச்சையான அதிகாரம் வழங்கப்படுமாயின் அது இலங்கையின் இறையான்மையை கேள்விக்குட்படுத்தும்.

இந்தியா, சீனா, அமெரிக்கா போன்ற நாடுகள் இன்றி எம்மால் சுவாசிக்கவும் முடியாத என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.

கடந்த 10 - 15 ஆண்டுகளாக எம்மால் எடுக்கப்பட்ட தவறான தீர்மானங்களின் காரணமாகவே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக அம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவிற்கு வழங்கப்பட்டமை, அதனையடுத்து இதில் ஒரு பகுதியை எவ்வாறு தம்வசப்படுத்துவது என்று இந்தியாவும் அமெரிக்காவும் பார்த்துக் கொண்டிருக்கிறன.

இலங்கையானது தற்போது சர்வதேச வல்லரசு நாடுகளின் கேந்திர நிலையமாக அமைந்துள்ளது. இந்த பலவந்த நாடுகளுடன் நாடு என்ற ரீதியில் எவ்வாறு முன்னோக்கி பயணிப்பது என்பதில் அவதானம் செலுத்த வேண்டும்.

இந்த 5 ஆண்டுகளில் நாட்டைக் காட்டிக் கொடுத்து ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் உரிமை எமக்கில்லை. குறித்த 3 நாடுகளிடமிருந்தும் அச்சுறுத்தல் ஏற்படாத வகையில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து சுமூகமாக முன்னோக்கி பயணிக்க வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08