விரைவில் தனிமைப்படுத்தல் குறித்து புதிய வழிகாட்டல்கள் - சுகாதார அமைச்சு

Published By: Digital Desk 4

29 Sep, 2021 | 04:17 PM
image

(எம்.மனோசித்ரா)

முழுமையாக தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டதன் பின்னர் வெளிநாடுகளிலிருந்து வருகை தருபவர்களுக்கான பி.சி.ஆர். பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்தல் குறித்து புதிய வழிகாட்டல்கள் வெளியிப்பட்டுள்ளன.

தீபாவளியை எவ்வாறு கொண்டாட வேண்டும் : சுகாதார அமைச்சு தெரிவிப்பது என்ன ? |  Virakesari.lk

அதற்கமைய ஒக்டோபர் முதலாம் திகதி முதல் வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வரும் முழுமையாக தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டுள்ள இலங்கையர்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் விமான பயணத்தை ஆரம்பிப்பதற்கு முன்னர் செய்து கொண்ட பி.சி.ஆர். பரிசோதனையில் கொவிட் தொற்று ஏற்படவில்லை என்ற முடிவு கிடைக்கப் பெற்றிருந்தால் , இலங்கைக்கு வருகை தந்தவுடன் விமான நிலையத்தில் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தாமலிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான தொழிநுட்பகுழு நேற்று செவ்வாய்கிழமை சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தலைமையில் கூடிய போது இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் கோரிக்கைக்கு அமைய இந்த கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டது. இந்த கலந்துரையாடலில் சுகாதார மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

முழுமையாக தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளாத வெளிநாட்டவர்கள் , வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை உயிரியல் குமிழி முறைமை ஊடாக ஹோட்டல்களுக்கு அழைத்துச் செல்வதற்கு வாய்ப்பளிக்குமாறும் , அங்கு பி.சி.ஆர். பரிசோதனைகளை முன்னெடுக்குமாறும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இதன் போது இலங்கை பிரஜைகளுக்கு ஹோட்டல்களில் அல்லது விமான நிலையத்தில் பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் போது தொற்று ஏற்படவில்லை என்ற முடிவு கிடைக்கப் பெற்றால் அவர்களுக்கு வீடுகளுக்குச் செல்ல அனுமதி வழங்கப்படும்.

இவ்வாறு வீடுகளுக்குச் செல்பவர்களுக்கு 12 ஆவது நாள் முன்னெடுக்கப்படும் பி.சி.ஆர். பரிசோதனையிலும் தொற்று ஏற்படவில்லை என்று உறுதிப்படுத்தப்பட்டால் அவர்கள் சமூகத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படுவர்.

வீடுகளில் தனிமைப்படுத்தல் வசதிகள் அற்ற நபர்கள் அரச தனிமைப்படுத்தல் நிலையங்களில் அல்லது அவர்களால் தெரிவு செய்யப்படும் ஹோட்டல்களில் 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் ஈடுபட்டு பின்னர் சமூகத்திற்குள் சென்று வழமையாக நடவடிக்கைகளில் ஈடுபட முடியும்.

தற்போது வெளிநாடுகளிலிருந்து வருகை தருபவர்கள் நாட்டை வந்தடைவதற்கு 72 மணித்தியாலயங்களுக்கு முன்னர் பி.சி.ஆர். பரிசோதனையை மேற்கொண்டிருக்க வேண்டும். இதன் போது தொற்று ஏற்படவில்லை என்ற முடிவு கிடைக்கப் பெற்றால் விமானத்தில் பயணிக்க அனுமதி வழங்கப்படும்.

முழுமையாக தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டவர்கள் , தடுப்பூசியைப் பெற்று இரண்டு வாரங்களின் பின்னர் நாட்டுக்கு வருகை தருவார்களாயின் , நாட்டை வந்தடைந்ததன் பின்னர் பி.சி.ஆர். பரிசோதனைகளை முன்னெடுத்து அதில் தொற்ற ஏற்படவில்லை என்று உறுதிப்படுத்தப்பட்டால் மாத்திரம் சமூகத்திற்குள் செல்ல முடியும் என்றும் இதன் போது தீர்மானிக்கப்பட்டது

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53