(இராஜதுரை ஹஷான்)

நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் முழுமையாக தளர்த்தப்பட்டவுடன் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்காக நாடு உத்தியோகப்பூர்வமாக திறக்கப்படும். 

வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஊடாகதான் கொவிட் வைரஸ்தொற்று தீவிரமடைகிறது என்ற கருத்து முற்றிலும் தவறானது என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கு அமைய சுற்றுலாத்துறை சேவை கைத்தொழிலை மீள ஆரம்பிக்காவிட்டால் பொருளாதாரம் மேலும் பாதிக்கப்படும்.

எதிர்வரும் மூன்று மாத காலத்திற்குள் 20,000 - 30,000 வரையிலான சுற்றுலா பயணிகளை நாட்டுக்கு அழைத்து வருவது எமது பிரதான இலக்காகும்.

சுற்றுலாத்துறை  சேவையாளர்களுடன் இன்று புதன்கிழமை சுற்றுலாத்துறை அமைச்சில் இடம் பெற்ற பேச்சுவார்த்தையின் போது இதனைத் தெரிவித்தார்.