ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பயணித்த ஹெலிகொப்டரை படம் பிடித்த நபரொருவர் கைதுசெய்யப்படுள்ளார்.

குறித்த ஹெலிகொப்டர் பம்பலபிட்டிய பொலிஸ் மைதானத்தில் தறையிறங்கும் போது  கைதுசெய்யப்பட்ட நபர் படம் பிடித்துள்ளார்.

இந்நிலையில் கைதுசெய்யப்பட்டவர் லிந்துலை பகுதியைச் சேர்ந்த 26 வயதுடையவர்  என தெரிவிக்கப்படுகின்றது.

கைதுசெய்யப்பட்ட நபர் ஹெலிகொப்டர் தரையிறங்குவதை படம் பிடிக்க ஆசையாக இருந்ததால் படம் பிடித்தேன் என தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.