ஈரானிய கச்சா எண்ணெய் கொள்முதலைக் குறைப்பது தொடர்பில் அமெரிக்கா சீனாவை இராஜதந்திர ரீதியில் அணுகியதாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.

Chinese and U.S. flags flutter outside a company building in Shanghai, China April 14, 2021. REUTERS/Aly Song

ஈரானின் அணுசக்தி திட்டத்தை கட்டுப்படுத்த ஈரானின் மீது அழுத்தம் கொடுக்க அமெரிக்க தடைகள் இருந்தபோதிலும், ஈரானின் பொருளாதாரத்தை தக்க வைக்க சீன நிறுவனங்கள் ஈரானிய எண்ணெயை கொள்வனவு செய்ததாக நம்பப்படுகிறது.

இந் நிலையிலேயே இந்த அழைப்பு வந்துள்ளது.

எனினும் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய அதிகாரிகளின் அறிக்கைகள் குறித்த சர்வதேச ஊடகங்களின் கேள்விகளுக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை உடனடியாக பதிலளிக்கவில்லை.

ஏப்ரல் மாதத்தில் தொடங்கிய 2015 ஒப்பந்தத்தை மறுமலர்ச்சி செய்வதற்கான மறைமுக அமெரிக்க-ஈரானிய பேச்சுவார்த்தைகள் கடந்த ஜூன் மாதத்தில் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தின் கீழ், ஈரான் தனது யுரேனியம் செறிவூட்டல் திட்டத்தில் வரம்புகளை வைக்க ஒப்புக்கொண்டது, இது அணு ஆயுதத்திற்கான பிளவுபட்ட பொருளை உருவாக்க ஒரு சாத்தியமான பாதையாகும்.