(நா.தனுஜா)
தகவல் அறியும் உரிமைக்கான சர்வதேச தினம் மற்றும் இலங்கையில் முதலாவதாக நிறுவப்பட்ட தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவின் ஐந்துவருட செயற்பாட்டுக்காலம் நிறைவுபெறல் ஆகியவற்றை முன்னிட்டு தகவல் அறியும் உரிமைச்சட்டம் தொடர்பில் இளைஞர், யுவதிகளைத் தெளிவூட்டும் செயற்திட்டமொன்று நேற்று முன்தினம் மத்திய மாகாணத்தை மையமாகக்கொண்டு இலங்கைத் தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்டது.
எப்ரியல் இளையோர் வலையமைப்புடன் இணைந்து இலங்கைத் தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவினால் நிகழ்நிலையில் (ஒன்லைன் வாயிலாக) நடாத்தப்பட்ட இந்தத் தெளிவூட்டல் செயற்திட்டத்தில் சுமார் 200 இளைஞர், யுவதிகள் இணைந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான சட்டத்தரணி கிஷாலி பின்டோ ஜனவர்தன மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற முன்னாள் தலைமை நீதியரசர் ரோஹினி வெல்கம ஆகியோருடன் ஊடகவியலாளர்களுடன் இணைந்துகொண்டு தகவல் அறியும் உரிமைச்சட்டம் தொடர்பான தெளிவுபடுத்தல்களை வழங்கிய அதேவேளை, சட்டத்தரணி ஜகத் லியனாராச்சியினால் இந்நிகழ்வு நெறியாள்கை செய்யப்பட்டது.
'நீதி மற்றும் நியாயத்துவத்திற்காக தகவல் சட்டத்தை பயன்படுத்துவோம்' எனும் தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தத் தெளிவூட்டல் நிகழ்வில், தகவல் அறியும் உரிமைச்சட்டத்துடன் தொடர்புடைய வகையில் எதிர்நோக்கிய சவால்கள் மற்றும் அச்சட்டத்தைப் பயன்படுத்தி அடைந்துகொண்ட வெற்றிகள் தொடர்பில் மேற்குறிப்பிட்டோர் தமது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர்.
தகவல் அறியும் உரிமைச்சட்டம் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும், பகிரங்க அதிகாரசபைகள் என்ற அதன் வரைவிலக்கணத்திற்குள் அரசியல் கட்சிகளும் உள்ளடக்கப்பட வேண்டும், இச்சட்டத்தை மேலும் வலுப்படுத்துவதற்கும் மேன்முறையீட்டு விசாரணையை செயற்திறன்மிக்கதாக மாற்றுவதற்கும் பிரதேச மட்டத்திலான அலுவலகங்கள் ஸ்தாபிக்கப்படவேண்டும் என்ற கருத்துக்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்த கிஷாலி பின்டோ ஜயவர்தனவினால் முன்வைக்கப்பட்டன.
மேலும் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தைப் பயன்படுத்தி தகவல்களைப் பெறுவதற்கு முயற்சித்தபோது எதிர்நோக்கிய பிரச்சினைகளை சிலர் பகிர்ந்துகொண்டதுடன் அவற்றைக் கையாளக்கூடிய முறை பற்றிய தெளிவுபடுத்தல்கள் நெறியாளர்களால் வழங்கப்பட்டன.
அதேவேளை வடமாகாணத்தைச் சேர்ந்த மக்கள் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் பெற்றுக்கொண்ட வெற்றிகள் குறித்துத் தெளிவுபடுத்திய எப்ரியல் இளையோர் வலையமைப்பின் தலைவர் ரவீந்திர டி சில்வா, எவ்வித இனமத வேறுபாடுகளுமின்றி இச்சட்டத்தைப் பயன்படுத்தி அவசியமான தகவல்களைப் பெற்றுக்கொள்ளமுடியும் என்பதையும் உதாரணங்களுடன் விளக்கிக்கூறினார்.
அத்தோடு கடந்த 5 வருட காலப்பகுதியினுள் தகவல் அறியும் உரிமை ஆணைக்குழு வழங்கிய கட்டளைகளில் நூற்றுக்கு 85 சதவீதமானவை முழுமையாகவோ அரைவாசியாகவோ தகவல்களை வெளியிடல் என்றடிப்படையில் அமைந்ததாகவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டதுடன் அதுமாத்திரமன்றி தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் தகவல்கோரல் மற்றும் பதில் வழங்கல் என்பன எழுத்துமூலமானதாகவே அமையவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM