வெளிநாடுகளிலிருந்து வருகை தருபவர்களுக்கான புதிய வழிகாட்டல்கள் அமுலில்

By Vishnu

29 Sep, 2021 | 08:07 AM
image

நேற்று நள்ளிரவு 12.00 மணி முதல் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகளுக்கான புதிய சுகாதார வழிகாட்டல்கள் நடைமுறைக்கு வந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு வரும் முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள், விமானத்தில் ஏறும் முன் மேற்கொண்ட கொவிட்-19 தொற்று தொடர்பான பி.சி.ஆர். முடிவுகளுக்கமைய, மீண்டும் இலங்கையில் பி.சி.ஆர். சோதனை மேற்கொள்ளாது விமான நிலையத்திலிருந்து வீடு திரும்ப அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதற்காக, கொவிட்-19 தடுப்பூசிகளின் இரண்டு அளவுகளையும் முழுமையாக பெற்ற பயணிகள் இலங்கைக வருவதற்கு முன்னர் 72 மணிநேரங்களுக்குள் மேற்கொள்ளும் பி.சி.ஆர். சோதனைகளில் கொவிட் தொற்றுக்கு எதிர முடிவினை கொண்டிருக்க வேண்டும்.

சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தலைமையில் நேற்று (28) பிற்பகல் சுகாதார அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலில், இது தொடர்பான தொழில்நுட்பக் குழுவால் எடுக்கப்பட்ட முடிவு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, குறித்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

May be an image of one or more people, people sitting, people standing and indoor

சுற்றுலா அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் வேண்டுகோளின் பேரில் இக்கலந்துரையாடல் நடைபெற்றுள்ளதுடன், இதில் சுகாதார மற்றும் சுற்றுலா அமைச்சகங்களின் உயர் அதிகாரிகள் மற்றும் சுற்றுலாத் துறையில் ஈடுபட்டுள்ள பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.

இதேவேளை, முழுமையாக தடுப்பூசி போடாத வெளிநாட்டவர்கள் தாங்கள் தனிமைப்படுத்தப்படும் ஹோட்டலுக்கு, தனிமைப்படுத்தல் உயிர்க் குமிழி பாதுகாப்பின் அடிப்படையில், செல்வதற்கு அனுமதி அளிக்கப்படவுள்ளது.

அங்கு வைத்து அவர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுமென சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்தார்.

எனினும், இலங்கையர்களுக்கு விமான நிலையத்தில் அல்லது அவர்கள் தங்கியிருக்கும் ஹோட்டலில் பி.சி.ஆர் சோதனை மேற்கொள்ளப்பட்டு, அதில் அவர்களுக்கு தொற்று ஏற்படாவிட்டால், அவர்களை வீட்டிற்கு அனுப்ப வாய்ப்பு உள்ளதாகவும், அவர்களுக்கு 12 ஆவது நாளில் மீண்டும் மேற்கொள்ளும் பி.சி.ஆர். சோதனையில் அவர்களுக்கு கொவிட் தொற்று ஏற்படாவிட்டால், அவர்களை சமூகத்துடன் இணைக்க வாய்ப்பு இருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.

வீட்டு தனிமைப்படுத்தல் வசதிகள் இல்லாதவர்கள், அரசாங்க தனிமைப்படுத்தல் மையங்களில் அல்லது அவர்கள் விரும்பும் ஹோட்டலில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு சமூகத்தில் மீண்டும் ஒருங்கிணைக்கப்படலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது நாட்டிற்கு வரும் பயணிகள் 72 மணி நேரத்திற்கு முன் கட்டாயம் பி.சி.ஆர். சோதனை மேற்கொள்ள வேண்டும் என்பதுடன், அவர்களது சோதனை முடிவுகளின் அடிப்படையில், அவர்கள் தொற்றாளர்களாக இல்லையெனின் மாத்திரம் விமானத்தில் பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள். 

அத்துடன் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டு, இரண்டு வாரங்கள் பூரணப்படுத்தப்பட்ட பயணிகள் இலங்கை திரும்பும்போது, அவர்களுக்கு மீண்டும் பி.சி.ஆர். சோதனை மேற்கொள்ளப்பட்டு அதன் முடிவுகளுக்கமைய, அவர்கள் சமூகத்தில் இணைக்கும் நடவடிக்கை இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பில் மின்சாரம் தாக்கி இராணுவ வீரர்...

2023-01-28 12:38:19
news-image

யாழில் தாய்ப்பால் புரைக்கேறி 30 நாட்களேயான...

2023-01-28 12:49:03
news-image

மட்டு கரடியனாற்றில் 16 மாடுகள் கடத்தல்...

2023-01-28 12:49:37
news-image

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ள வசந்த...

2023-01-28 12:06:00
news-image

தமிழர்களுக்கான தீர்வுகளை வலியுறுத்தி சுதந்திரதினத்தன்று யாழிலிருந்து...

2023-01-28 11:38:21
news-image

3 இந்திய மீன்பிடிப் படகுகள் அரசுடமையாக்கப்பட்டன

2023-01-28 11:21:37
news-image

வாழைச்சேனையில் போதைப்பொருள் பாவனைக்கு எதிராக கண்டன...

2023-01-28 11:38:57
news-image

பாதுகாப்பு, செழிப்பினை தொடர்ந்தும் முன்னேற்ற நாங்கள்...

2023-01-28 11:07:07
news-image

மீற்றர் வட்டி விவகாரம் ; மேலும்...

2023-01-28 11:00:53
news-image

தேர்தல் முடியும்வரை புதிய ஆணைக்குழு அமைப்பதை...

2023-01-28 10:49:46
news-image

சகோதரனுக்காக நாட்டின் அரசியலமைப்பை மாற்றிய உலகில்...

2023-01-28 10:55:50
news-image

இக்கட்டான நிலைமையில் ஒத்துழைப்பு வழங்கிய இந்திய...

2023-01-28 10:26:02