ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் ஒருங்கிணைக்கவும் : ஐரோப்பிய ஒன்றியத் தூதுவரிடம் டக்ளஸ் எடுத்துரைப்பு

29 Sep, 2021 | 07:05 AM
image

(ஆர்.யசி)

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் ஒருங்கிணைக்கவும் தடைகள் இல்லாமல் மீன் உணவுகளை ஏற்றுமதி செய்வது தொடர்பிலும் சர்வதேச நாடுகளின் கடல் எல்லைகளுக்குள் தவறுதலாக அல்லது சட்டவிரோதமாக நுழைகின்ற இலங்கையின் ஆழ்கடல் மீன்பிடி கப்பல்களுக்கு  எதிராக   மேற்கொள்ளப்படும் சட்ட நடவடிக்கைகள் தொடர்பாகவும் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இலங்கை மற்றும் மாலத்தீவுக்கான தூதுவர் டெனிஸ் சாய்பி மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான ஒத்துழைப்பு தலைவர் மற்றும் அதிகாரிகள் குழுவினருக்கும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் இராஜாங்க அமைச்சர் கஞ்சன  விஜேசேகர உள்ளிட்ட மீன்பிடி அமைச்சின் அதிகாரிகள் மட்டத்தில் முக்கிய கலந்துரையாடல் நேற்று கொழும்பில் அமைந்துள்ள மீன்பிடித்துறை அமைச்சில் இடம்பெற்றது

இந்த சந்திப்பின் போது, ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபடுகின்ற இலங்கை கடற்றொழிலாளர்கள்,  எல்லைதாண்டிச் சென்று வெளிநாடுகளில் கைதாகின்ற சந்தர்ப்பங்களில் குறித்த நாடுகளில் மேற்கொள்ளப்படும் சட்ட நடவடிக்கைகள்,  பின்னர் அவர்கள் இலங்கைக்கு திரும்புகின்றபோது படகு உரிமையாளர்களுக்கு எதிராகவும் படகில் பணியாற்றிய தொழிலாளர்கள் மீதும் இலங்கையில் மேற்கொள்ளப்படும் சட்ட நடவடிக்கைகள் போன்றவை தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் கேட்டறிந்து கொண்டுள்ளார்.

இந்நிலையில், கடற்றொழில் அமைச்சினால் வெற்றிகரமாக ஆரம்பிக்கப்பட்டுள்ள ஆழ்கடல் மீன்பிடி கலன்களுக்கு (VMS) கண்காணிப்பு  கருவிகளை பொருத்தும் செயன்முறையை சுட்டிக்காட்டியுள்ள கடற்றொழில் அமைச்சர், குறித்த செயற்றிட்டங்கள் நிறைவடைந்ததும் ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபடுகின்ற இலங்கையின் பலநாள் கலன்களை சிறப்பாக கண்காணிக்க முடியும் எனவும் தெளிவுபடுத்தியுள்ளார்.

இது தவிர, மீன்பிடி தொடர்பான சர்வதேச நியமங்களுக்கு  அமைய ஆழ்கடல் மீன்பிடி செயற்பாடுகளை ஒழுங்குபடுத்துவது மற்றும் மீன்பிடிக் கலன்களின் எண்ணிக்கையை வரையறை செய்வது தொடர்பாகவும்  கடற்றொழில் அமைச்சு அவதானம் செலுத்தி வருவதாகவும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எடுத்துரைத்தார்.

சந்திப்பு குறித்து இராஜாங்க அமைச்சர் கஞ்சன  விஜேசேகர கூறுகையில்,

ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை தூதர் மற்றும் அதன் பிரதிநிதிகளுடன் இன்று காலை (நேற்று)  மீன்வளத்துறை அமைச்சில் சந்தித்து கலந்துரையாடினோம்.  இலங்கை மீன்பிடி கப்பல்கள் மற்றும் கைது செய்யப்பட்ட மீன்பிடி கப்பல்கள் சர்வதேச கடல் மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது சட்டவிரோதமாக  கடல் எல்லைகளை மீறியதாக ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிற நாடுகளின் பாதுகாப்புப் படைகளால் தொடர்ச்சியாக தெரிவிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இலங்கை அரசாங்கம் பின்பற்றும் வேலைத்திட்டம் மற்றும் புதிய சட்டங்களை உருவாக்கும் நோக்கங்கள் குறித்து அவர்கள் கேட்டறிந்துகொண்டனர். மேலும், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் ஒருங்கிணைக்கவும் தடைகள் இல்லாமல் மீன் உணவுகளை ஏற்றுமதி செய்யவும், ஏனைய முக்கிய செயற்பாடுகள் தொடர்பிலும் ஆராயப்பட்டது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கோட்டாபய சிங்கப்பூரில் தங்கியிருப்பதற்கு அனுமதியளித்த விவகாரம்...

2022-12-08 15:00:01
news-image

பொலிஸாரை மிரட்டி, வீடியோ காட்சிகளை சமூக...

2022-12-08 14:51:03
news-image

மலையகத்தின் பல பிரதேசங்களிலும் வீசிய மினி...

2022-12-08 14:58:47
news-image

கணவர்களால் தாக்கப்பட்டு வைத்தியசாலைகளுக்கு வரும் பெரும்பாலான...

2022-12-08 14:26:11
news-image

தடைப்பட்டிருந்த மலையக ரயில் சேவைகள் வழமைக்கு...

2022-12-08 14:19:05
news-image

மூத்த ஊடகவியலாளர் கலாபூஷணம் எம்.எஸ்.குவால்தீன் காலமானார்

2022-12-08 14:38:40
news-image

வவுனியாவில் தனியார் கல்வி நிறுவனத்தின் முன்...

2022-12-08 14:29:48
news-image

கொழும்பில் தீ விபத்து

2022-12-08 13:48:01
news-image

நாமலுக்கு எதிரான வழக்கின் விசாரணைகள் ஒத்திவைப்பு

2022-12-08 13:37:40
news-image

புலம்பெயர் தமிழர்கள் இலங்கையில் முதலீடு செய்ய...

2022-12-08 13:34:43
news-image

பசறையில் பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை

2022-12-08 13:18:14
news-image

தனது தங்க நகையை கொள்ளையிட்டவர்களுடன் சூட்சுமமாக...

2022-12-08 13:06:52