தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து பேச்சுவார்த்தைகள் முன்னெடுப்பு - வியாழேந்திரன்

Published By: Digital Desk 4

28 Sep, 2021 | 10:41 PM
image

(இராஜதுரை ஹஷான்)

தமிழ் மக்களின் பெரும் ஆதரவுடன் ஆட்சிக்கு வந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் அவர் தலைமையிலான நல்லாட்சி அரசாங்கமும் அரசியல் கைதிகள் விடுதலையிலும், காணி விடுவிப்பு விவகாரத்திலும் சிறந்த தீர்வை பெற்றுக் கொடுக்கவில்லை.

ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ ஒரு தடவையில் 16 தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்துள்ளார். ஏனைய தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து முறையான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

வியாழேந்திரனுக்கு இராஜாங்க அமைச்சு..! | Virakesari.lk

வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களுக்கு அபிவிருத்தி மற்றும் அரசியல் உரிமைகள் ஒருமித்த வகையில் கிடைக்கப் பெறும்.என பின்தங்கிய கிராம பிரதேச அபிவிருத்தி, வீட்டு விலங்கின வளர்ப்பு  மற்றும் சிறுபொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர்வியாழேந்திரன்தெரிவித்தார்.

 பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 அவர் மேலும் குறிப்பிடுகையில்,

 இறக்குமதி விடயத்தில் அரசாங்கம் கடினமான கொள்கையினை பின்பற்றவில்லை. அத்தியாசிய மூலப் பொருட்கள்  தற்போதும் இறக்குமதி செய்யப்படுகின்றன.

அத்தியாவசிய பொருட்ளுக்கான கேள்வியை தேசிய மட்டத்தில்  பூர்த்தி செய்வதற்கான அடிப்படை நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது.

  தேசிய பொருளாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இறக்குமதி துறையில் ஒரு சில மட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தேசிய உற்பத்திகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் இறக்குமதி பொருட்களை தடை செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் செயற்பாடுகளை அரசாங்கம் ஒருபோதும் முன்னெடுக்காது. மக்கள் நெருக்கடிக்குள்ளானால் அது  அரசாங்கத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும்.மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க அரசாங்கம் பொறுப்புடன் செயற்படுகிறது.

 கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் ஒரு சில விடயங்களில் குறைப்பாடுகள் காணப்படுகின்றன. என்பதை ஏற்றுக் கொள்கிறோம். பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும், மகக்ளுக்கு நிவாரணம் வழங்கவும் அரசாங்கம் எந்நிலையிலும் கவனம் செலுத்தியுள்ளது.

தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையை வெகுவிரைவில் சீர் செய்துக் கொள்ள முடியும். அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொள்வதில் மக்கள் எதிர்க் கொள்ளும் அசௌகரியங்களுக்கு விரைவில் சாதகமான தீர்வு வழங்கப்படும்.

தற்போதைய எதிர்க்கட்சி ஆட்சியிலிருந்திருந்தால் நாடு   பாரிய வீழ்ச்சியை நோக்கி சென்றிருக்கும். கண்ணுக்கு தெரிந்த தாக்குதலை கூட தடுக்க முடியாதவர்களிடம் ஆட்சியதிகாரம் ஒப்படைக்கப்பட்டிருந்தால் கண்ணுக்கு புலப்படாத வைரஸ் தொற்று வெற்றிப் பெற்றிருக்கும்.அரசாங்கத்தினால் ஆக்கப்பூர்வமான அபிவிருத்தி செயற்திட்டங்கள் நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படுகின்றன.

கொவிட் தாக்கம் பெரும் சவாலாக காணப்பட்டது. அச்சவால் கூடதற்போது சிறந்த முறையில் கையாளப்பட்டுள்ளது.இதனையும் கூட எதிர் தரப்பினர் அரசியல் இலாபம் தேடிக் கொள்ளும் வகையில் விமர்சனங்களை மாத்திரம் முன்வைத்து வருகிறார்கள்.

 சுற்றுலாத்துறை வீழ்ச்சியடைந்துள்ளது என்று தற்போது போர்கொடி தூக்கும் எதிர்தரப்பினர் கடந்த காலத்தில் இடம் பெற்ற சம்பவங்களை மறந்து விட்டார்கள்.

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவம் நாட்டில் சுற்றுலாத்துறைக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது . 2019 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து சுற்றுலாத்துறை சற்று முன்னேற்றமடைந்த போது கொவிட் -19 பெருந்தொற்று சுற்றுலாத்துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதனை அரசாங்கத்தின் பலவீனம் என்று எவராலும் குறிப்பிட முடியாது. சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களக்கு அமைய சுற்றுலாத்துறையை ஆரம்பிக்க உரிய திட்டங்கள் தற்போது செயற்படுத்தப்பட்டுள்ளன.

 நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ் தலைமைகள் அரசாங்கத்திற்கு ஆதரவாகவே செயற்பட்டார்கள். ஆனால் காலம் காலமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் மக்கள் எதிர்க் கொண்ட அடிப்படை பிரச்சினைகளுக்கு ஒருபோதும் இவர்கள் தீர்வை பெற்றுக்கொடுக்கவில்லை.

2005 தொடக்கம் 2014 ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல்வேறு அபிவிருத்தி செயற்திட்ட பணிகள் முன்னெடுக்கப்பட்டன. கொவிட் தாக்கத்திற்கு மத்தியில் அரசாங்கம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல அபிவிருத்தி செயற்திட்ட பணிகளை முன்னெடுத்துள்ளது.

தமிழ் மக்கள் மத்தியில் காணப்படும் பல தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசாங்கம் அதிக கவனம் செலுத்தியுள்ளது. காணி விடுவிப்பு, அரசியல் கைதிகளின் விடுவிப்பு,மக்களின் வாழ்வாதாரத்தோ கூடிய அபிவிருத்தி பணிகள் ஆகிய விடயங்கள் குறித்து  நடைமுறை  கொள்கைக்கு அமைய தீர்வு வழங்கப்பட்டுள்ளன. எதிர்வரும் காலங்களில் அனைத்து கோரிக்கைகளுக்கும் தீர்வு  கிடைக்கப் பெறும் என்று எதிர்பார்க்கிறோம்.மக்களின் பிரச்சினைகளுடன் தொடர்ந்து அரசியல் செய்ய முடியாது.

 தமிழ் மக்களின் பெரும் ஆதரவுடன் ஆட்சிக்கு வந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  குறைந்தது.ஐந்து அரசியல் கைதிகளுக்கு கூட பொது மன்னிப்பு  வழங்கி விடுவிக்கவில்லை.ஆனால்  தற்போதைய ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ 16 தமிழ் அரசியல் கைதிகளை ஒரே தடவையில் விடுவித்தார். மிகுதியாகவுள்ள அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான சாத்தியம் அதிகளவில் காணப்படுகிறது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களுக்கான அபிவிருத்தியும், அரசியல்உரிமைகளும் முரண்பட்ட வகையில் பெற்றுக் கொள்ளப்படும். காலம் காலமாக அரசாங்கத்துடன் முரண்ப்பட்டுக் கொண்டிருந்தால் மக்களுக்கு அபிவிருத்தியும் கிடைக்காது, உரிமைகளும்கிடைக்காது. மக்களின் கண்ணீருடன் தொடர்ந்து அரசியல் செய்ய முடியாது. மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்கும் பொறுப்பு அரசியல்தலைமைகளுக்கும்,  மக்கள் பிரநிதிகளுக்கும் உண்டு என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எதிர்ப்புக்களுக்கு மத்தியிலேயே அஜித் மன்னம்பெருமவுக்கு வேட்புமனுவில்...

2024-10-13 19:23:56
news-image

ஐக்கிய மாதர் சக்தியின் தேசிய அமைப்பாளர்...

2024-10-14 02:42:39
news-image

இந்த மண்ணில் தமிழரசுக்கட்சியினால்தான் தமிழ் மக்கள்...

2024-10-14 02:23:21
news-image

யாழ். தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் தமிழரசு...

2024-10-14 02:07:52
news-image

முக்கியமான தீர்மானங்களின் போது நபர்கள் தொடர்பில்...

2024-10-14 01:58:57
news-image

கொழும்பில் பிரபல வர்த்தகர் ரணில் விலத்தரகே...

2024-10-14 01:41:54
news-image

தேர்தல் செலவு அறிக்கையை கையளிக்காத ஜனாதிபதி...

2024-10-13 23:39:33
news-image

தேர்தலில் போலித் தமிழ்த்தேசியவாதிகளையும் போதை வியாபாரிகளையும்...

2024-10-13 19:23:46
news-image

கொடிகாமத்தில் குண்டு வெடிப்பு; இளைஞன் படுகாயம்

2024-10-13 19:17:35
news-image

சீரற்ற காலநிலை – கொழும்பு கம்பஹா...

2024-10-13 18:48:40
news-image

களுவாஞ்சிக்குடியில் இரு மோட்டார் சைக்கிள்கள் மோதியதில்...

2024-10-13 18:37:55
news-image

அம்பாறையில் தமிழ் மக்களின் வாக்கினை சிதைக்க...

2024-10-13 18:58:57