( எம்.எப்.எம்.பஸீர்)
மன்னார் பிரதேச சபையின் தலைவர் மற்றும் சபை அங்கத்துவ பதவியிலிருந்து தன்னை நீக்கிய வடக்கு ஆளுநரின் தீர்மானத்துக்கு எதிராக ஷாகுல் ஹமீத் மொஹமட் முஜாஹிர் மேன் முறையீட்டு நீதிமன்றில் கட்டளை நீதிப் பேரணை (Writ of Mandamus) மனுவொன்றினை தாக்கல் செய்துள்ளார்.
வட மாகாண ஆளுநர் பியன்சியா சறோஜினிதேவி மன்மதராஜா சார்ள்ஸ், ஓய்வு பெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி கந்தையா அரியநாயகம், சட்ட மா அதிபர் உள்ளிட்டோர் இம்மனுவின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.
தன்னை மன்னார் பிரதேச சபை தலைவராக தொடர்ந்தும் பதவியில் இருக்கும் வண்ணமான கட்டளைப் பேராளை ஒன்றினை, வட மாகாண ஆளுநருக்கு பிறப்பிக்குமாறு மனுதாரர் தனது மனுவில் மேன் முறையீட்டு நீதிமன்றைக் கோரியுள்ளார்.
மன்னார் பிரதேச சபையின் முதல் முஸ்லிம் தலைவர் தானே எனக் கூறும் மனுதாரர், மன்னார் பிரதேச சபை எல்லைக்கு உட்பட்ட அபிவிருத்திகளை தான் திட்டமிட்டு முன்னெடுக்கும் நிலையில் தமக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்படுத்தபப்டுவதாகவும் அதன் விளைவே தான் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், எவையேனும் தகுதியின்மைகள் உள்ளனவா என்பது பற்றி விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி கந்தையா அரியநாயகத்தின் கீழ் அமைக்கப்பட்ட தனி நபர் விசாரணைக்குழுவினால் விசாரணை செய்யப்பட்டு வாதித்தரப்பின் சாட்சியங்களைக் கவனத்தில் கொண்டதன் பின்பு தனி நபர் விசாரணைக் குழுவின் அவதானிப்புக்கள் மற்றும் தீர்ப்புக்களுடன் ஆளுநரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும், தன் பக்க நியாயத்தை முன் வைக்க தனக்கு போதுமான சந்தர்ப்பத்தை அவ்விசாரணைக் குழு அளிக்கவில்லை எனவும் மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.
இது இயற்கை நீதிக் கோட்பாட்டை மீரும் செயல் என மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சாகுல் கமீது முஹம்மது முஜாஹிர் எனும் மனுதாரராகிய தன்னை மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் என்ற வகையில் அப்பதவியில் பணிகள்,கடமைகளை நிறைவேற்றும் போது 1987 ஆண் ஆண்டின் 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தின் உப பிரிவு 185 (1)(இ),(அ) ஆகிய பிரிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றங்களை புரிந்தார் என்பதற்கு போதுமான சாட்சியங்கள் உள்ளன என திருப்தியடைவதாக கூறி, பதவி நீக்கம் செய்யப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் வட மாகாண ஆளுநரால் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மனுதாரர் மனுவில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந் நிலையில், நாளைய தினம் (29) மன்னார் பிரதேச சபைக்கு புதிய தலைவர் ஒருவரை தேர்ந்தெடுப்பதற்காக நடாத்தப்படவுள்ள கூட்டத்தை தடை செய்யுமாறும் மனுதாரர் கோரியுள்ளார்.
இந் நிலையில் இந்த கட்டளைப் பேராணை மனு நாளை (29) மேன் முறையீட்டு நீதிமன்றால் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM