ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் தரவுக் கட்டமைப்பில் தகவல்களை அழித்ததாக கூறப்படும் பொறியியலாளர் கைது

Published By: Digital Desk 4

28 Sep, 2021 | 10:39 PM
image

( எம்.எப்.எம்.பஸீர்)

தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் ஈ.என்.ஆர்.எம்.ஏ. (eNMRA) தரவுக்கட்டமைப்புக்குள், பலவந்தமாக உள் நுழைந்து,  தகவல்களை அழித்தமை தொடர்பில்  எபிக் லங்கா டெக்னொலஜி தனியார் நிறுவனத்தின் பொறியியலாளராக செயற்பட்ட ஒருவரை சி.ஐ.டி. இன்று மாலைக் கைது செய்தது.  

ராமநாயக்க ஆரச்சிலாகே தொன் பிரமோத் திலீப ராமநாயக்க எனும் பொறியியலாளரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக சி.ஐ.டி.யின் உயர் அதிகாரி ஒருவர் கூறினார். 

ஏற்கனவே இந்த விவகாரத்தில் அந் நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி  தரின் கல்பகே சி.ஐ.டி.யினரால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள பின்னணியிலேயே இன்று குறித்த பொறியியலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 இந்த விவகாரம் தொடர்பில் சி.ஐ.டி.யின் டிஜிட்டல் பகுப்பாய்வு விசாரணைப் பிரிவினர் முன்னெடுத்த விஷேட விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்ட தகவல்களுக்கு அமைய இன்று மாலை அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சி.ஐ.டி.  விசாரணைகளில் தரவுக்கட்டமைப்பை வெளியிலிருந்து எவரும் ஊடுருவி அழிக்கவில்லை என்பதும்,  தரவுக் கட்டமைப்பைன் அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்து சென்ற எபிக் லங்கா டெக்னொலஜி நிறுவனத்துக்கு உள்ளயே இந்த சம்பவம் இடம்பெற்றிருக்க வேண்டும் எனவும், அது தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாகவும் சி.ஐ.டி.யின் டிஜிட்டல் பகுப்பாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் எஸ்.எம். சேனரத்ன நீதிமன்றுக்கு அறிவித்திருந்தார்.

எவ்வாறாயினும் குறித்த தரவுகள் அழிந்த பின்னர், நிர்வாக நடவடிக்கைகளுக்கு பொறுப்பானவர் என்ற ரீதியில் முதல் சந்தேக நபரான பிரதான நிறைவேற்று அதிகாரி  உள்ளக விசாரணைகளை  நடாத்திய நிலையில், இதன்போது பிரமோத் எனும் பொறியியலாளர், அவரது கையால் குறித்த தகவல்கள் தவறுதலாக அழிந்ததாக ஒப்புக்கொண்டுள்ளதாக ஏற்கனவே நீதிமன்றுக்கு தெரியப்படுத்தப்பட்டிருந்தது.

 இந் நிலையிலேயே குறித்த பொறியியலாளர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நாளை கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளதாக சி.ஐ.டி.யின் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 15:50:37
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56