( எம்.எப்.எம்.பஸீர்)
சி.ஐ.டி. எனும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணை ஒன்றுக்கான வாக்கு மூலம் ஒன்றினைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் நாளை மறுதினம் வியாழக்கிழமை (30) சி.ஐ.டி.யில் ஆஜராகுமாறு காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்காரவுக்கு மீண்டும் அறிவித்தல் அனுப்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த 20 ஆம் திகதி திங்களன்று காலை 9.00 மணிக்கு சி.ஐ.டி.யின் டிஜிட்டல் பகுப்பாய்வு விசாரணைப் பிரிவில் விசாரணைகளுக்காக ஆஜராகுமாறு, நாரஹேன்பிட்டி பொலிஸ் பொறுப்பதிகாரி ஊடாக அறிவித்தல் கையளிக்கப்பட்டிருந்தது.
இந் நிலையில் குறித்த பொலிஸ் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க தான் தயார் எனினும், விசாரணை விடயம் குறித்து அறிவித்தலில் தெரிவிக்கப்படாமையால் அதனை தெரியப்படுத்துமாறு மனுஷ நாணயக்கார சட்டத்தரணி ஊடாக சி.ஐ.டி.க்கு அறிவித்திருந்தார்.
ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் தரவுக் கட்டமைப்பு தகவல்கள் அழிந்தமை தொடர்பில் அவ்வதிகார சபை தலைவர் வைத்தியர் ரசிக்க விஜேவர்தன செய்த முறைப்பாட்டுக்கு அமையவும், ரெலிகொம் நிறுவனத்தின் சமூக பாதுகாப்பு தொடர்பிலான பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரால் நிர்மல் தர்மரத்னவின் முறைப்பாடு தொடர்பிலான விசாரணைகளுக்காகவே அழைக்கப்பட்டுள்ளதாக, சி.ஐ.டி.யின் டிஜிட்டல் பகுப்பாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி எஸ். எம். சேனாரத்ன மனுஷ நாணயக்காரவுக்கு கடிதம் ஊடாக தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் கடந்த 03 திகதி ஊடக சந்திப்பொன்றினை நடாத்தியிருந்த மனுஷ நாணயக்கர, ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் தரவுகள் அழிக்கப்பட்டமை தொடர்பில் பல தகவல்களை வெளிப்படுத்தியிருந்தார். அது தொடர்பிலேயே வாக்கு மூலம் ஊடாக தகவல்களைப் பெற சி.ஐ.டி.யில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விசாரணைகளை புறக்கணிப்பது, தண்டனை சட்டக் கோவையின் 172 அவது அத்தியாயத்துக்கு அமைய தண்டனைக்குரிய குற்றம் எனவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM