இரத்தினபுரி பகுதியில் இடம்பெற்ற பெரஹரவின் போது யானை ஒன்றின் தாக்குதலுக்கு இலக்காகி பெண் ஒருவர் பலியாகியுள்ளதோடு 11 பேர் காயமடைந்துள்ளனர்.

60 வயதுடைய லீலாவதி என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

யானையின் தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்த 11 பேர் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.