புத்தளம் பள்ளம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சேருகல பகுதியில் நேற்று திங்கட்க்கிழமை (27) இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.

பல்லம சேருகல பகுதியைச் சேர்ந்த 3 வயதும் 6 மாதங்களும் உடைய குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்துச் சம்பவம் இடம்பெற்ற வேளை, சேருகல பகுதியில் குறித்த குழந்தையின் தந்தை உழவு இயந்திரத்தின் மூலம் புற்களை வெட்டிக்கொண்டிருக்கும் போது, அங்கு வந்த குழந்தையை உழவு இயந்திரம் மோதியுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது படுகாயமடைந்த குறித்த குழந்தை அங்கிருந்தவர்களால் உடனடியாக சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்த பின்னர், அந்தக் குழந்தை அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழதுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

விபத்துடன் தொடர்புடைய உழவு இயந்திரத்தின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பல்லம பொலிஸார் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.