(எம்.மனோசித்ரா)

நாட்டில் நீண்ட நாட்களின் பின்னர் இவ்வாரம் நாளொன்றில் ஆயிரத்திற்கும் குறைவான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். அதே போன்று மரணங்களின் எண்ணிக்கையும் குறைவடைந்து வருகிறது. 

ஏற்பகனவே நாட்டில் காணப்பட்ட அபாய நிலைமை குறைவடைந்துள்ளமையை இந்த எண்ணிக்கைகள் காண்பிக்கின்றன.

மாறாக கொவிட் அச்சுறுத்தல் இன்னமும் முற்றாக நீங்கவில்லை என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

இந்நிலையில் நேற்று திங்கட்கிழமை 55 கொவிட் மரணங்கள் பதிவாகின. கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ள இந்த 55 பேரில் 29 ஆண்களும் , 26 பெண்களும் உள்ளடங்குகின்றனர். 39 பேர் 60 வயதுக்கு மேற்பட்டோராவர். மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 12 786 ஆக உயர்வடைந்துள்ளது.

இந்நிலையில் இன்றைய தினம் மாலை 6 மணி வரை 642 கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளானோர் மொத்த எண்ணிக்கை 515 234 ஆக உயர்வடைந்துள்ளது. இவர்களில் 456 087 பேர் குணமடைந்துள்ளதோடு , 46 416 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.