இதய நோயுடைய பிள்ளைகளுக்கு இந்தியாவில் சத்திரசிகிக்சை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானம்

By Digital Desk 2

28 Sep, 2021 | 07:03 PM
image

எம்.மனோசித்ரா

இலங்கையில் வருடாந்தம் 3000 குழந்தைகள் இதயநோயுடன் பிறக்கின்றனர். அவர்களில் 1500 - 2000 பேருக்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ள வேண்டியும் உள்ளது.

கூடுதலான மருத்துவமனைகளிலிருந்து இவ்வாறான பிள்ளைகளை கொழும்பு சீமாட்டி ரிஜ்வே சிறுவர் மருத்துவமனைக்கு அனுப்புவதுடன், ஒரு வருடத்தில் சுமார் 900 சத்திரசிகிச்சைகளை மாத்திரமே மேற்கொள்வதற்கான வசதிகள் குறித்த மருத்துவமனையில் காணப்படுகின்றன.

அதனால், தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற 'சிறிய இதயம்' செயற்திட்டத்தின் கீழ் சத்திரசிகிச்சை கூடம் மற்றும் அவசர சிகிச்சைக்காக போதுமானளவு வசதிகளை வழங்குவதற்காக தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வரை, இதய சத்திரசிகிச்சை மேற்கொள்வதற்கான நெரிசலைக் குறைப்பதற்காக இந்தியாவின் 3201 மாவட்ட சர்வதேச றொட்டரி கழகம் மற்றும் ஆர்.ஐ.டீ. 3220 கொழும்பு மேற்கு றொட்டரி கழகத்தால் இந்தியாவின் கொச்சியில் அமைந்துள்ள அம்ரிதா மருத்துவ விஞ்ஞான நிறுவனத்தில் பிள்ளைகளுக்கான சிக்கலான இதய சத்திரசிகிச்சையை மேற்கொள்வதற்கான வசதிகளை ஏற்படுத்துவதற்காக இரண்டு வருடங்களுக்கான கருத்திட்டமொன்று றொட்டரி கழகத்தின் நிதியுதவியின் கீழ் நடைமுறைப்படுத்துவதற்கு உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, குறித்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக சுகாதார அமைச்சும் இந்தியாவின் 3201 மாவட்ட சர்வதேச றொட்டரி கழகம் மற்றும் ஆர்.ஐ.டீ. 3220 கொழும்பு மேற்கு றொட்டரி கழகத்திற்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை மேற்கொள்வதற்காக சுகாதார அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மகாவலி வலயம் என்ற பெயரில் வடக்கில்...

2022-10-05 16:48:48
news-image

பல்கலைக்கழக மாணவர்கள் பலவந்தமாக போராட்டங்களுக்கு அழைத்துச்...

2022-10-05 16:29:29
news-image

புகையிரத திணைக்கள காணிகளை சட்டவிரோதமாக உபயோகிப்போருக்கு...

2022-10-05 16:44:13
news-image

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடுவோருக்கு கடும் பாதுகாப்பு...

2022-10-05 21:37:06
news-image

பல்கலைக்கழகங்களில் வன்முறைக்கு இடமளிக்க முடியாது -...

2022-10-05 16:45:38
news-image

ஆதாரங்களை சேகரிக்கும்பொறிமுறையை- சர்வதேச விசாரணை பொறிமுறையாக...

2022-10-05 16:52:42
news-image

பேருவளை- தர்காநகர் பகுதிகளில் நுகர்வுக்குப் பொருத்தமில்லாத...

2022-10-05 16:35:06
news-image

காத்தான்குடியில் 15 வயது சிறுமியை பாலியல்...

2022-10-05 16:19:31
news-image

கொழும்பு - கிராண்ட்பாஸ் துப்பாக்கிச்சூட்டு :...

2022-10-05 16:15:06
news-image

தொலைபேசிக் கட்டணம் இன்று முதல் அதிகரிக்கும்

2022-10-05 16:38:33
news-image

நவீன தொழில்நுட்பங்களை கற்றுக்காெள்ளுமாறு சபாநாகருக்கு அறிவுரை...

2022-10-05 14:40:02
news-image

5 மணிநேர நடவடிக்கையின் பின் பாதுகாப்பாக...

2022-10-05 16:36:12