இருபதுக்கு 20  கிரிக்கெட் அரங்கில் விராட் கோஹ்லியின் மற்றுமொரு சாதனை

By Gayathri

28 Sep, 2021 | 06:59 PM
image

(எம்.எம்.சில்வெஸ்டர்)

கடந்த ஞாயிறன்று மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக நடைபெற்ற டி20 போட்டியில் 13  ஓட்டங்களை பெற்றபோது டி20 கிரிக்கெட் போட்டி அரங்கில் 10 ஆயிரம் ஓட்டங்கள் என்ற மைல் கல்லை எட்டிய உலகின் 5 ஆவது வீரராகவும் முதலாவது இந்தியராகவும் சாதனைப் படைத்தார் விராட் கோஹ்லி .

இப்போட்டியில் அவர் அரைச் சதம் அடித்து அணியின் வெற்றிக்கு பங்காற்றயிருந்ததுடன், டி 20 அரங்கில் 314 போட்டிகளில் 299 இன்னிங்ஸ்களில் விளையாடி  5 சதங்கள், 74 அரைச் சதங்கள் அடங்கலாக 10038 ஓட்டங்களை  குவித்துள்ளார். 

மேலும், டி20 அரங்கில் 41.65 என்ற ஓட்ட சராசரியுடன் 111 ஓட்டங்களை அதிக பட்ச தனது தனிப்பட்ட ஓட்ட எண்ணிக்கையாகக் கொண்டுள்ள விராட் கோஹ்லி, 133.85 ஓட்ட வேகத்தை கொண்டுள்ளார். 

கிறிஸ் கெய்ல் 

10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த முதல் கிரிக்கெட் வீரராக 'யுனிவர்சல் பொஸ்' என்றழைக்கப்படும் மேற்கிந்தியத் தீவுகளின் கிறிஸ் கெய்ல் உள்ளார். 

145.76 ஓட்ட வேகத்தைக் கொண்டள்ள கிறிஸ் கெய்ல், 447 டி20 போட்டிகளில் பங்கேற்று 439 இன்னிங்ஸ்களில் துடுப்பெடுத்தாடி 22 சதங்கள் 87 அரைச்சதங்கள் அடங்கலாக 14275 ஓட்டங்களை குவித்து முதலிடத்தில் உள்ளார்.  

புனே வோரியர்ஸ் அணிக்கெதிராக அசுரத்தனமாக ஆட்டமிழக்காது பெற்ற 175 ஓட்ட எண்ணிக்கை இவரின் அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கையாகும்.  இதுவே  டி 20 அரங்கில் தனிநபர் ஒருவரால் பெறப்பட்ட அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கையாகும். 

இவர் உலகின் அநேகமான பிரீமியர் லீக்கில் விளையாடியவர் என்ற சிறப்பையும் கொண்டுள்ளார்.

கிரன் பொலார்ட்

இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் மற்றுமொரு மேற்கிந்தியத் தீவு வீரரும் அவ்வணியின்  தலைவருமான கிரன் பொலார்ட் உள்ளார்.  உலகெங்கும் காணப்படும் பிரீமியர் லீக் இருபதுக்கு இருபது உள்ளிட்ட 564 டி 20 போட்டிகளில்  விளையாடியுள்ள பொலார்ட், 500 இன்னிங்ஸ்களில் துடுப்‍பெடுத்தாடி ஒரு சதம், 56  அரைச்சதங்கள் அடங்கலாக 11,202 ஓட்டங்களை குவித்துள்ளார். இவரின் ஓட்ட வேகமானது 152.74 ஆகும். இது கிறிஸ் கெய்லை விடவும் அதிகமாகும்.

சொய் மலிக் 

பாகிஸ்தானின் சகலதுறை வீரரான சொய்ப் மலிக் 437 டி20 போட்டிகளில் பங்கேற்று 408 ‍ இன்னிங்ஸ்களில் துடுப்பெடுத்தாடி 10,832 ஓட்டங்களை குவித்து மூன்றாவது இடத்தில் உள்ளார். 

இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ள இவர் ஒரு சதம் கூட அடித்ததில்லை. இவரின் அதிகபட்ச ஓட்ட எண்ணிக்‍கை ஆட்டமிழக்காது பெற்ற 95 ஓட்டங்களாகும். 66 அரைச் சதங்கள் அடங்கலாக 125.77 என்ற ஓட்ட வேகத்தை கொண்டுள்ளார் சொய்ப் மலிக்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான சொய்ப் மலிக் இந்தப் பட்டியலில் இவர் இடம்பிடித்துள்ளமை பலருக்கும் வியப்பாக இருக்கும். ஆனாலும், இவரும் உலகெங்கும் காணப்படும் பிரீமியர் லீக் போட்டிகளில் விளையாடி வருபவர் ஆவார்.  தற்போது இந்தியன் பிரீமியர் லீக்கில் விளையாடத போதும் ஆரம்ப காலக்கட்டத்தில் இவர் விளையாடியிருந்தார்.

டேவிட் வோர்னர் 

அவுஸ்திரேலியாவின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான டேவிட் வோர்னர் டி20 அரங்கில் 306 போட்டிகளில் பங்கேற்று 305 8 சதங்கள், 82  அரைச்சதங்கள் அடங்கலாக 10019 ஓட்டங்களை குவித்து 10 ஆயிரம் ஓட்டங்கள் என்ற மைல் கல்லை எட்டிய நான்காவது வீரராகவுள்ளார்.  ‍ 

இவர் இம்முறை ஐ.பி.எல். இன் முதற் பாகத்தின்போது, அதாவது கடந்த ஏப்ரல் மாத்தின்போது இந்தியாவில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான 40 ஓட்டங்களை பெற்றபோது 10 ஆயிரம் ஓட்டங்களைக் கடந்தார்.

இலங்கையர்கள் இல்லை 

டி20 அரங்கில் இலங்கையர்கள் எவரும் இந்தப் பட்டியலில் இல்லாமை கவலைக்குரிய விடயாகும். அதிலும், தற்போது கிரிக்கெட் விளையாடும் இலங்கையர்கள் எவரும் 3000 ஓட்டங்களைக் கூட கடந்ததில்லை. 

இலங்கையின் முன்னாள் வீரர்களான குமார் சங்கக்கார 6937 ஓட்டங்களையும், மேஹல ஜயவர்தன 5479 ஓட்டங்களையும், திலகரட்ண டில்ஷான் 5193 ஓட்டங்களையும், திசர பெரேரா 3748 ஓட்டங்களையும், உப்புல் தரங்க 3384 ஓட்டங்களையும் பெற்றுள்ளனர்.

தற்போது கிரிக்கெட் விளையாடும் இலங்கையர்களில் டில்ஷான் முனவீர (2647), எஞ்சலோ  மெத்தியூஸ் (2597),  குசல் பெரேரா (2581) ஆகியோர் டி20 அரங்கில் அதிகூடிய ஓட்டங்களை குவித்தவர்களாக உள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மரதனில் சொந்த உலக சாதனையை கிப்சோகே...

2022-09-26 15:07:13
news-image

கபடி போட்­டி­யா­ளர்­க­ளுக்கு கழி­வ­றையில் வைத்து உணவு...

2022-09-26 13:15:07
news-image

இங்கிலாந்துக்கு எதிரான 4ஆவது சர்வதேச இருபது...

2022-09-26 11:27:15
news-image

அவுஸ்திரேலியாவுக்கு எதிராக விறுவிறுப்பாக நடைபெற்ற சர்வதேச...

2022-09-26 09:29:13
news-image

யார் பலசாலி ? இந்தியாவா ?...

2022-09-25 15:35:12
news-image

அவுஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை சமப்படுத்தியது இந்தியா

2022-09-24 09:36:18
news-image

தொடரை வெல்ல அவுஸ்திரேலியாவும் சமப்படுத்த இந்தியாவும்...

2022-09-23 16:38:43
news-image

பாபர் அஸாம் - ரிஸ்வான் அதிரடி...

2022-09-23 09:34:57
news-image

107ஆவது தேசிய டென்னிஸ் சம்பியன்ஷிப்பில் அஷேன்,...

2022-09-22 20:35:10
news-image

உதைபந்தாட்ட சம்மேளனத்தின் புதிய யாப்பு பெரும்பான்மை...

2022-09-22 15:17:50
news-image

ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப்...

2022-09-21 22:58:49
news-image

2022 றக்பி விருது விழாவில் கண்டி...

2022-09-21 21:03:22