யாழ்ப்பாணம் மாநகர சபையின் ஆளுகைக்குட்பட்ட கோம்பயன் மணல் மின் தகன மயானத்தில் தகனம் செய்யப்படும் சடலங்களுக்கான கட்டணத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மாநகர சபைபின் மாதாந்த அமர்வு இன்றையதினம் மாநகர சபையின் முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தலைமையில் இடம்பெற்றது

இதன்போது எதிர்வரும் முதலாம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் மின் தகன கட்டணத்தில் மாற்றம் செய்வதற்கு சபை அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி 12 வயதுக்கு குறைந்த கொரோனா தொற்றாளர்களின் சடலங்களுக்கு 4 ஆயிரம்  ரூபாவும், ஏனைய கொரோனா தொற்றாளர்களின் சடலங்களுக்கு 8 ஆயிரம் ரூபாவும் தகனம் செய்வதற்கு அறவிடப்படவுள்ளதாக தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அத்தோடு கொரோனா தொற்று அல்லாத சடலங்களுக்கு 15 ஆயிரம் ரூபா அறவிடப்படவுள்ளதாகவும்  தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.