(எம்.மனோசித்ரா)

மின்னேரிய பொலிஸ் பிரிவில் மினிஹிரிகம பிரதேசத்தில் மக்கள் வங்கிக்குரிய ஏ.டி.எம். இயந்திரத்தின் தகடு வெட்டி அகற்றப்பட்டு அதற்குள் காணப்பட்ட பணத்தொகை கொள்ளையிப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

மின்னேரிய பொலிஸ் பிரிவில் மினிஹிரிகம பிரதேசத்தில் ஹபரண - பொலன்னறுவை வீதியில் அமைந்துள்ள மக்கள் வங்கிக்கு உரித்துடைய ஏ.டி.எம். இயந்திரத்திலிருந்து பணத்தை கொள்ளையிட்டமை தொடர்பில் ஹிங்குராங்கொடை மக்கள் வங்கி முகாமையாளரால் மின்னேரிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கமைய 27 ஆம் திகதி சிறிய ரக லொறியொன்றில் குறித்த இடத்திற்கு வருகை தந்த நபர் அல்லது குழுவினரால் உபகரணங்களைப் பயன்படுத்தி ஏ.டி.எம். இயந்திரத்தின் தகடு வெட்டி அகற்றப்பட்டு அதற்குள் காணப்பட்ட பணத்தொகை கொள்ளையிப்பட்டுள்ளது.

எவ்வாறிருப்பினும் கொள்ளையிடப்பட்டுள்ள பணத்தொகை இது வரையில் மதிப்பிடப்படவில்லை. மின்னேரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.