(எம்.மனோசித்ரா)
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய நேற்று திங்கட்கிழமை மத்துகம பொலிஸ் பிரிவில் யட்டதொலவத்த பிரதேசத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடொன்று சோதனைக்குட்படுத்தப்பட்ட போது , அங்கிருந்து போதைப்பொருட்கள் , துப்பாக்கி உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ் பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
குறித்த வீட்டிலிருந்து ஒரு கிலோ 55 கிராம் ஹெரோயின் , 50 கிராம் ஐஸ் போதைப்பொருள் , வெளிநாட்டில் தயாரிக்கப்படும் ரிவோல்வர் ரக துப்பாக்கி , இலத்திரனியல் தராசு என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
இவ்வாறு கைற்றப்பட்ட போதைப்பொருள் மற்றும் ஏனைய பொருட்கள் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இதனுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் தொடர்பில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM