எம்.எம்.சில்வெஸ்டர்

இத்தாலியில் வசிக்கும் இலங்கையர்களை உள்ளடக்கிய விளையாட்டு சங்கங்கள் கலந்துகொள்ளும் எல்லே விளையாட்டுப் போட்டித் தொடரில் இலங்கையிலிருந்து அணியொன்றை பங்கேற்கச் செய்வதற்கு  இலங்கை எல்லே சம்மேளனம் நடவடிக்கை எடுத்துள்ளது. 

இலங்கையிலுள்ள பிரபல எல்லே விளையாட்டுச் சங்கங்களின் திறமையான வீரர்களை உள்ளடக்கிய அணியொன்றை இத்தாலிக்கு அனுப்புவதற்கு எதிர்பார்த்துள்ளதாக இங்கை எல்லே சம்மேளனத்தின் தலைவர் ஜயதிஸ்ஸ ரொட்றிகோ தெரிவித்துள்ளார். 

"எல்லே போட்டிகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு சுகாதார பிரிவு அதிகாரிகளின் அனுமதிக்காக காத்திருக்கிறோம். அவர்களின் அனுமதி கிடைத்தவுடன் உள்ளக ரீதியான எல்லே போட்டிகளை ஆரம்பித்து ,தேசிய மட்ட போட்டிகளை நடத்த எதிர்பார்த்துள்ளோம். 

இதற்கான நடவடிக்கைகள் தற்போது எமது சங்கத்தினரால் எடுக்கப்பட்டு வருகிறது"  என்றார்.   

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் எமது சங்கத்தின் நிறைவேற்று உறுப்பினர் நடத்த முடியாது போன கூட்டங்களை சூம் தொழில்நுட்ப வசதியுடன் நடத்தவுள்ளோம். 

எதிர்வரும் முதலாம் திகதியன்று தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் எடுக்கப்பட்டால், எல்லே போட்டிகளை நடத்துவதற்கு முழு மூச்சுடன்  செயற்படுவோம் என அவர் மேலும் ‍ தெரிவித்தார்.