சுவீடனின் கோதன்பேர்க் நகரில் அமைந்துள்ள குடியிருப்பு கட்டிடமொன்றில் செவ்வாய்க்கிழமை அதிகாலை ஏற்பட்ட வெடி விபத்தில் குறைந்தது 25 பேர் காயமடைந்துள்ளனர்.

வெடி விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணைகளை தொடங்கியுள்ள நிலையில், காயமடைந்த அனைவரும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

அவசரகால சேவைகள் மக்களை கட்டிடத்திலிருந்து வெளியேற்றுவதற்கும், தீயை அணைப்பதற்குமான போராட்டங்களை முன்னெடுத்துள்ளன.