இந்தியாவில் சூறாவளியின்போது பிறந்த 2 குழந்தைகளுக்கு ‘குலாப்’ என்று பெயர்

Published By: Digital Desk 3

28 Sep, 2021 | 01:08 PM
image

இந்தியாவில் சூறாவளியின்போது பிறந்த 2 குழந்தைகளுக்கு ‘குலாப்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

வடக்கு வங்காள விரிகுடாவில் விருத்தியடைந்த சூறாவளிக்கு ‘குலாப்’ என்று பெயர் சூட்டப்பட்டிருந்தது. இந்த பெயரை பாகிஸ்தான் வழங்கியது.

‘குலாப்’ என்றால் ‘ரோஜா’ என்று பொருள். பலத்த காற்று, கனமழை, நிலச்சரிவு என்று இந்தியாவில் ஒடிசாவிலும் குலாப் சூறாவளி  தனது முத்திரைகளை பதித்துவிட்டுப் போனது. 

அந்த நேரத்தில் ஒடிசாவின் கஞ்சம் மாவட்டத்தில் 41 கர்ப்பிணிகள் பிரசவத்தில் குழந்தைகளை பெற்றுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக, அந்த தாய்களும், சேய்களும் நலமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் சுவாரசியமான விஷயம் என்னவெனில் கஞ்சம் மாவட்டத்தில் இரு வெவ்வேறு அரசு வைத்தியசாலைகளில் கர்ப்பிணிகள் இருவர் பெற்றெடுத்த இரு பெண் குழந்தைகளுக்கு ‘குலாப்’ என்று பெயர் சூட்டப்பட்டதுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right