பீப்­பா­டலை பாடி­யது சிம்­பு­வா? ஆதா­ரங்­களை திரட்டும் பொலி­ஸார்

Published By: Robert

18 Dec, 2015 | 10:45 AM
image

சென்னை பொலிஸார் சிம்­பு­வுக்கும் அனி­ருத்­துக்கும் எதி­ரான ஆதா­ரங்­களை தற்­போது சேக­ரித்து வரு­வ­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

சிம்பு, அனிருத் கூட்­ட­ணியில் வெளி­யான பீப் பாடல் கடந்த வாரம் இணை­ய­த­ளங்­களில் வெளி­யாகி பெரும் சர்ச்­சை­யை ஏற்­ப­டுத்­தி­யது.

இது குறித்து பொலிஸ் தரப்பில் கூறும்­போது "பிரச்­சி­னைக்­கு­ரிய ஆபாச பாடல் வெளி­யான விவ­கா­ரத்தில், சம்­பந்­தப்­பட்ட நடிகர் சிம்பு அதனை நான் வெளி­யி­ட­வில்லை என்று கூறியிருக்­கிறார்.

யூடியூப் மூல­மா­கவே அந்த பாடல் வெளியில் வந்­துள்­ளது. அப்­ப­டி­யென்றால் சிம்பு பாடி இருப்­ப­தாக கூறப்­படும் பாடலை வெளி­யிட்­டவர் யார்? என்­பதை முதலில் கண்­டு­பி­டிக்க வேண்டும். அதற்­கான முயற்­சி­களில் ஈடு­பட்டுள்ளோம். அந்த நபர் பிடி­பட்டால் அவர் அளிக்கும் தக­வல்­களின் அடிப்­ப­டையில் அடுத்­த­கட்ட விசா­ர­ணைக்கு செல்வோம்.

சர்ச்­சைக்­கு­ரிய பாடலை சிம்­புதான் பாடி­னாரா? என்­ப­தையும் உறு­தி­ப்ப­டுத்த வேண்டும். இதற்­காக ‘வாய்ஸ் டெஸ்ட்' என்று அழைக்­கப்­படும் குரல் பரி­சோ­த­னையும் நடத்­தப்­பட வேண்­டி­யுள்­ளது. இந்த சோத­னையை தட­ய­வியல் நிபு­ணர்­களே நடத்­து­வார்கள். அவர்கள் சிம்­புவை வர­வ­ழைத்து சம்­பந்­தப்­பட்ட பாடல் வரி­களை பாடச்­சொல்லி அதனை பதிவு செய்து வைத்துக் கொள்­வார்கள். பின்னர் இணை­ய­த­ளத்தில் வெளி­யான பாட­லுடன் அதனை ஒப்­பிட்டு பார்த்து இரண்­டுக்கும் ஒரே குரல் தானா? என்­பதை ஆய்வு செய்­வார்கள்.

இப்­படி திரட்­டப்­படும் ஆதா­ரங்­களின் உண்மை தன்மையை வைத்தே சிம்புவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும். அதற்காகத்தான் காத்திருக்கிறோம்". என்று சென்னை பொலிஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதியுடன் இணைந்த...

2025-06-17 16:33:32
news-image

டிஸ்னி- பிக்ஸார் நிறுவனத்தின் 'எலியோ' படத்தின்...

2025-06-17 16:02:32
news-image

விமல் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு...

2025-06-17 16:02:06
news-image

பிரபல நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் இலங்கை...

2025-06-17 13:25:33
news-image

பான் இந்திய நட்சத்திர நடிகர் பிரபாஸ்...

2025-06-16 17:29:40
news-image

புதுமுகங்கள் நடிக்கும் 'ஹும்' படத்தின் இசை...

2025-06-16 16:38:44
news-image

தயாரிப்பாளர் எம். கார்த்திகேசன் எழுதி, நடித்து,இயக்கும்...

2025-06-16 16:35:20
news-image

அருண் பாண்டியன்- கீர்த்தி பாண்டியன் இணைந்து...

2025-06-16 16:26:19
news-image

புதுமுக கலைஞர் பிருத்விராஜ் ராமலிங்கம் நடிக்கும்...

2025-06-16 16:22:10
news-image

தனுஷ் - நாகார்ஜுனா இணைந்திருக்கும் 'குபேரா'...

2025-06-16 15:52:28
news-image

பேட்ரியாட் படப்பிடிப்பிற்காக மோகன்லால், குஞ்சாக்கோ போபன்...

2025-06-15 16:13:23
news-image

மிஷ்கின் குரலில் ஒலிக்கும் 'லவ் மேரேஜ்'...

2025-06-14 19:14:59