வடக்கு நைஜீரியாவில் வெவ்வேறு மாநிலங்களில் நடந்த மூன்று வெவ்வேறு தாக்குதல்களில் டஜன் கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர்.

Image

வடமேற்கு மாநிலமான கடுனாவில், ஒரு கிராமத்தில் ஆயுததாரிகள் திங்கட்கிழமை தாக்குதல் நடத்தியதில் குறைந்தது 34 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 7 பேர் காயமடைந்தனர்.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் இருவர் கைதுசெய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும் கச்சியா மாவட்டத்தில் கடுனியா பகுதியில் அமைந்துள்ள தேவாலயத்தில் துப்பாக்கி ஏந்தியவர்கள் ஞாயிற்றுக்கிழமை தாக்குதல் நடத்தினர்.

இதன்போது ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், சில வழிபாட்டாளர்கள் பலத்த காயங்களுக்கு உள்ளாகினர்.

வடமேற்கு சோகோட்டா மாநிலத்தில் அமைந்துள்ள தொலைதூர இராணுவ முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 22 நைஜீரிய பாதுகாப்பு வீரர்கள் கொல்லப்பட்டனர்.

நைஜீரியாவின் இராணுவம் சந்தேகத்திற்குரிய இஸ்லாமிய அரசுடன் இணைந்த போராளிகள் மற்றும் குற்றவாளிகள் இந்த தாக்குதலின் பின்னணியில் இருப்பதாகக் கூறியது.